- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
வெண்டைக்காய் வச்சு வெண்டைக்காய் சப்ஜி, வெண்டைக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் புளி கூட்டு, வெண்டைக்காய் பச்சடி அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இந்த மாதிரி வேர்க்கடலை பொடி செய்து அதில் வெண்டைக்காய் பொரியல் ஒரு தடவ செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் பொதுவாக பச்சை காய்கறிகள் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில வாரத்தில் ஒரு தடவையாவது வெண்டைக்காய் சாப்பிடணும்.
எப்பவுமே ஒரே மாதிரியா வெண்டைக்காய் ரெசிபிஸ் சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு அருமையா இருக்கும். வேர்கடலையிலையும் நிறைய சத்துக்கள் இருக்கு அதனால இரண்டையும் சேர்த்து இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சீங்கன்னா கண்டிப்பா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். அதே சமயத்துல ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த ரெசிபிக்கு பூண்டு சேர்க்கும் போது பூண்டை தோலோட தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் அப்பதான் ரொம்ப நல்லா இருக்கும். இந்த டேஸ்டான ஆரோக்கியமான வெண்டைக்காய் வைத்து செய்யக்கூடிய வேர்கடலை வெண்டைக்காய் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : கிராமத்து வெண்டைக்காய் காரக் குழம்பு
Ingredients
Method
ஒரு கடாயில் வேர்க்கடலை பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம், கருவேப்பிலை பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதக்கியதும் வெண்டைக்காயை கொஞ்சம் பெரியதாக நறுக்கி சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெண்டைக்காய் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை தூவி இறக்கினால் சுவையான வேர்கடலை வெண்டைக்காய் தயார்.






