- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
எப்பவுமே நம்ம வீட்டில் சப்பாத்தி, பூரி, போட்டா அதுக்கு உருளைக்கிழங்கு கிரேவி முட்டை கிரேவி தான் வைப்போம். ஆனால் ஒரு தடவை இந்த சூப்பரான வேர்கடலை மிளகு சுக்கா வச்சு பாருங்கள் டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். குழந்தைகளுக்கு வேர்க்கடலை சாப்பிட கொடுக்கிறது ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது ஆனா ஒரு சில குழந்தைகள் வேர்கடலையை சாப்பிட மாட்டார்கள் அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான வேர்கடலை மிளகு சுக்கா செஞ்சு கொடுங்கள்.
கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க ருசியாவும் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த வேர்க்கடலை மிளகு சுக்கா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸிதான். நம்ம வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை போதுமானது எப்பவாவது நீங்கள் வேர்க்கடலை வாங்குனா எப்பவுமே அத அவித்து சாப்பிடாமல் ஒரு தடவை இந்த மாதிரி சூப்பரான வேர்கடலை மிளகு சுக்கா செய்து பாருங்கள் அவ்ளோ ருசியா இருக்கும்.
இந்த வேர்க்கடலை மிளகு சுக்காவை சப்பாத்தி பூரிக்கு மட்டும் இல்லாமல் இட்லி, தோசை, சாதம், புலாவ், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்ளோ ருசியா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் இதை செஞ்சு கொடுக்கலாம் உங்க குழந்தைகளோட லன்ச் பாக்ஸ்க்கு சப்பாத்தி பூரி செஞ்சு அதுக்கு சைடுஷா இந்த வேர்க்கடலை மிளகு சுக்காவை கொடுக்கலாம். இந்த வேர்க்கடலை மிளகு சுக்காவை ஒரு வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பராவே இருக்கும்.
ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீர்கள். உங்க வீட்டில் இருக்கிற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வேர்க்கடலையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கு. இரும்பு சத்துக்களும் இருக்கு அதனால் உடம்புல ஹீமோகுளோபின் கம்மியா இருக்கிறவங்க வேர்க்கடலையை தினமும் கூட சாப்பிடலாம். இப்போது சுவையான வேர்கடலை மிளகு சுக்கா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : பூரிக்கு இந்த வேர்க்கடலை கறி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் வேர்க்கடலையை குக்கரில் சேர்த்து இரண்டு விசில் விட்டு அரைவேக்காடு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலா, வேர்க்கடலை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
பின் மசாலா நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை மிளகு சுக்கா தயார்.






