பட்டாணி வைத்து பட்டாணி குருமா நம்ம செஞ்சு சாப்பிட்டு இருப்போம் பொதுவா நம்ம சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா பட்டாணி குருமா வைத்து சாப்பிடும்போது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சப்பாத்திக்கு மட்டும் இல்லாம இடியாப்பத்துக்கு கூட இந்த பட்டாணி குருமா வச்சு சாப்பிடுவோம் ஆனா எப்பவுமே பட்டாணி வைத்து குருமா மட்டும் செய்யாம ஒரே ஒரு தடவை இதே மாதிரி பட்டாணி புளிக்குழம்பு செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த பட்டாணி வைத்து செய்யக்கூடிய புளிக்குழம்பு சப்பாத்திக்கும் கூட நம்ம சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். அதுவும் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாவே இருக்கும்.
நம்ம சுண்டல் தட்டாம் பயிறு மொச்சை பயிறு இதில் எல்லாம் புளிக்குழம்பு வச்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரே ஒரு தடவை பட்டாணிலையும் புளிக்குழம்பு வச்சு சாப்பிட்டு பாருங்க உங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போ இருக்கிற இதே அளவுகளில் அப்படியே செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான பட்டாணி புளிக்குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான பட்டாணி புளிக்குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பட்டாணி புளிக்குழம்பு | Peas Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 100 கி பட்டாணி
- 1/4 கி கத்தரிக்காய்
- 100 கி சின்ன வெங்காயம்
- 4 தக்காளி
- புளி நெல்லிக்காய் அளவு
- 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 பெரிய வெங்காயம்
செய்முறை
- பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைத்து ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் புளியை கரைத்து சேர்த்து அதனுடன் குழம்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- சின்ன வெங்காயத்தையும் தக்காளி ஒரு கடாயில் சேர்த்து நன்றாக வதக்கி அதனை ஆற வைத்து அரைத்து அந்த விழுதை குழம்புடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- கத்திரிக்காயையும் நறுக்கி குழம்புடன் சேர்க்கவும்.
- அனைத்தும் நன்றாக கொதித்த உடன் அரை கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அந்த விழுதையும் குழம்புடன் சேர்க்கவும்.
- குழம்பு நன்றாக வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை பெரிய வெங்காயம் சேர்த்து தாளித்து சேர்த்துவிட்டால் சுவையான பட்டாணி புளிக்குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இனி இரவு உணவான சப்பாத்தி மற்றும் பூரிக்கு இதுபோன்ற மக்கானா பட்டாணி கிரேவி செய்து பாருங்கள்!