- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பீர்க்கங்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்ல சத்தான காய் அப்படின்னு சொல்லலாம் இது நீர் காய் அப்படின்றதால எல்லாருமே இந்த பீர்க்கங்காய உணவுல சேர்த்துக்கணும். சிறுநீரகப் பிரச்சனை இருக்கிறவங்க கண்டிப்பா இந்த நீர் காயான பீர்க்கங்காய அடிக்கடி உணவில் சேர்த்துக்கிட்டா ரொம்ப நல்லது. பொதுவா பீர்க்கங்காய் வச்சு பொரியல் தான் செய்வாங்க இந்த பீர்க்கங்காய் ல வெறும் எண்ணெய் பீர்க்கங்காய் செஞ்சு சாப்பிட்டாலே ரொம்ப சூப்பரா இருக்கும். அப்படி இல்லன்னா இப்ப நம்ம செய்ய போற இந்த பீர்க்கங்காய் பருப்பு கூட்டு கூட செஞ்சு பாருங்க சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும்.
ரொம்ப காரசாரமா சாப்பிட விரும்பாதவங்க இந்த மாதிரி ஒரு தடவை பீர்க்கங்காய் வச்சு பருப்பு போட்டு செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த பீர்க்கங்காய் பருப்பு கூட்டு கார குழம்புக்கு ரொம்பவே ருசியா இருக்கும் ரசம் சாதத்துக்கும் கூட ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இவ்ளோ ருசியான இந்த பீர்க்கங்காய் பருப்பு கூட்டு உங்க வீட்டிலயும் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க இந்த பருப்பு கூட்ட இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த ருசியான பீர்க்கங்காய் பருப்பு கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாவூறும் சுவையில் இந்த பீர்க்கங்காய் ஊறுகாய் செய்து பாருங்கள் ஆறு மாதங்கள் வரை அப்படியே இருக்கும்!!!
Ingredients
Method
முதலில் பீர்க்கங்காயை தோல் நீக்கி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சீரகம், சோம்பு மஞ்சள் தூள் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
குக்கரில் நறுக்கி வைத்த பீர்க்கங்காய் பாசிப்பருப்பு அரைத்த விழுது தேவையான அளவு உப்பு தக்காளி அனைத்தையும் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை பெரிய வெங்காயம் காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக தாளித்து பீர்க்கங்காய் உடன் சேர்த்து விட்டால் சுவையான பீர்க்கங்காய் பருப்பு கூட்டு தயார்.






