Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ருசியான பீர்க்கங்காய் இறால் பொரியல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான பீர்க்கங்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க பீர்க்கங்காய் பிடிக்காதவர் கூட விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது.

எப்படி இந்த பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

பீர்க்கங்காய் பொரியல் | Peerkangai Poriyal Recipe In Tamil

Print Recipe
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான பீர்க்கங்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க பீர்க்கங்காய் பிடிக்காதவர் கூட விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது.
எப்படி இந்த பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword peerkangai poriyal, பீர்க்கங்காய் பொரியல்
Prep Time 10 minutes
Cook Time
Advertisement
10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 பீர்க்கங்காய்
  • 30 காய்ந்த இறால்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 கறிவேப்பிலை கொத்து

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • பீர்க்கங்காய் தோல் சீவி ஒரு அங்குலம் வட்டமாக நறுக்கி அதை இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • காய்ந்த இறாலை மண் போக தண்ணீரில் அலசி வைக்கவும்.
  • அடுத்து வாணலில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, போட்டு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்ந்த இறால் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  • அதில் பீர்க்கங்காய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வேகவைக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, பெருகங்கை வெந்ததும் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கி விட்டு இறாலை சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.
  • பிறகு இரண்டு கையளவு தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து கிளறி விட்டு இரண்டு நிமிடம் வேக விடவும்.
  • தண்ணீர் வற்றியதும் ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
Advertisement
swetha

Recent Posts

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

18 நிமிடங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

2 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

3 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

5 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

8 மணி நேரங்கள் ago