- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- sweets
எப்பவுமே அன்னாச்சி பழத்தை அப்படியே நறுக்கி தான் சாப்பிட்டு இருப்போம். இல்லனா உப்பு மிளகாய் தூள் போட்டு சாப்பிடுவோம். ஆனா இன்னைக்கு நம்ம செய்யப்போற இந்த ஸ்வீட் கண்டிப்பா நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. உங்க வீட்ல இந்த பழம் நிறைய இருந்துச்சுன்னா சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா கவலையே படாதீங்க இந்த மாதிரி ஒரு ஸ்வீட் செஞ்சு சாப்பிடுங்க. குழந்தைகளுக்கு மட்டும் இந்த ஸ்வீட் கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நல்லா ஏதாவது விருந்து சாப்பாடு சாப்பிட்டு இந்த ஸ்வீட் செஞ்சு சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும்.
இது எதுல செஞ்சது அப்படின்னு தெரியாத அளவுக்கு அவ்வளவு ருசியா இருக்கக்கூடிய இந்த அன்னாசி பழ ஸ்வீட் எல்லாருடைய ஃபேவரட் ஆகவும் மாறிடும். சுவையான இந்த ஸ்வீட்ட ஒரு தடவை மட்டும் உங்க வீட்ல செஞ்சு பாருங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் நல்லா காரசாரமா இனிப்பா இருக்கிற இந்த ஸ்வீட்ட செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா சாப்பிட்டுட்டு ரெசிபி கேட்டுட்டு தான் போவாங்க உங்களை பாராட்டிட்டு போவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.
மாங்கா பச்சடி சாப்பிடும்போது உரப்பு புளிப்பு இனிப்பு எல்லாமே இருக்கும். அது பிடிச்சவங்களுக்கு இந்த ஸ்வீட் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுலயும் அதே மாதிரி புளிப்பு இனிப்பு காரம் எல்லாமே இருக்கும். அதனால அவ்வளவு ருசியா இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் கொஞ்சம் காரம் கம்மியா குடுங்க பெரியவங்க சாப்பிடும் போது காரம் எவ்வளவு வேணுமோ அவ்வளவு சேர்த்து சாப்பிடுங்க. சுவையான சூப்பரான இந்த ஸ்வீட் கண்டிப்பா உங்க வீட்ல செய்ய வேண்டிய ஒரு ஸ்வீட் தான். எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா கண்டிப்பா இந்த ஒரு ஸ்வீட்டை முயற்சி செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த சூப்பர் டேஸ்டான அன்னாசி பழ ஸ்வீட் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ராகி அன்னாசிபழ பூரணம் கொழுக்கட்டை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
ஒரு பெரிய கடாயில் அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து அதனுடன் சர்க்கரை, மிளகாய் தூள், உப்பு சில்லி ஃப்ளேக்ஸ் பட்டைத்தூள் கொட்டை எடுத்த பேரிச்சம்பழம் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
அனைத்தையும் கலந்து அடுப்பில் வைத்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
இறுதியாக சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கேரமலைஸ் ஆன பிறகு இறக்கினால் சுவையான அன்னாசி பழ ஸ்வீட் வித்யாசமான முறையில் தயார்.






