Home சைவம் பிரண்டை துவையல் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க கால்வலி பறந்து போயிடும்!!

பிரண்டை துவையல் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க கால்வலி பறந்து போயிடும்!!

பிரண்டை துவையல் செய்து சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பெரும்பாலும் பிரண்டை சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்படின்னு நிறைய பேரு அதை ஒதுக்கி வச்சுடுவாங்க. ஆனால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கணும். இந்த பிரண்டை துவையல் எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம். ஒரு தடவை இதே மாதிரி செய்முறையில் செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த பிரண்டை துவையல் போட்டு கொஞ்சமா நெய் இல்லனா நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டா அவ்வளவு ஆரோக்கியமா இருக்கும்.

-விளம்பரம்-

டேஸ்டும் பக்காவா இருக்கும். இதை இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். ரசம் சாதம் தயிர் சாதம் லெமன் சாதம், புளி சாதம் இதுக்கும் கூட சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இந்த டேஸ்டான பிரண்டை துவையல சாப்பிடறது மூலமா நாள்பட்ட கால் வலி சரியாகும். அடிக்கடி வாந்தி வர்ற பிரச்சனை சரியாகும். அது மட்டும் இல்லாம பசியே எடுக்காமல் இருப்பவர்களுக்கு இந்த பிரண்டை துவையல் சாப்பிடுவது மூலமா நல்லா பசி எடுக்கும்.

பல பிரச்சினைகள் சரியாக இந்த பிரண்டை துவையல் சாப்பிடலாம். இந்தப் பிரண்டை துவையல சுத்தம் செய்வதற்கு முன்னாடி கையில தேங்காய் எண்ணெய் தேய்ச்சிட்டு சுத்தம் செய்யணும் இல்லனா கை அரிக்கும். அதனால மேல இருக்கக்கூடிய தோலை நல்லா சீவி எடுத்துட்டு உள்ள இருக்கக்கூடிய சதைப்பகுதியை மட்டும் சேர்த்து துவையல் செய்யணும். இந்த துவையல் செய்றதுக்கு பொருட்களை எல்லாம் எண்ணெயில நல்லா வறுத்து எடுக்கணும். அப்பதான் டேஸ்டா இருக்கும். இந்த சுவையான பிரண்டை துவையல் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

Print
5 from 2 votes

பிரண்டை துவையல் | Pirandai Thuvayal Recipe In Tamil

பிரண்டை துவையல் செய்து சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பெரும்பாலும் பிரண்டை சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்படின்னு நிறைய பேரு அதை ஒதுக்கி வச்சுடுவாங்க. ஆனால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கணும். இந்த பிரண்டை துவையல் எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம். ஒரு தடவை இதே மாதிரி செய்முறையில் செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த பிரண்டை துவையல் போட்டு கொஞ்சமா நெய் இல்லனா நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டா அவ்வளவு ஆரோக்கியமா இருக்கும். டேஸ்டும் பக்காவா இருக்கும். இதை இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். ரசம் சாதம் தயிர் சாதம் லெமன் சாதம், புளி சாதம் இதுக்கும் கூட சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Pirandai Thuvayal
Yield: 4 People
Calories: 184kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பிரண்டை
  • 2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 5 வர மிளகாய்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள்
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு தேவையான அளவு
  • புளி நெல்லிக்காய் அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.
  • பிரண்டையை நன்றாக கழுவி சுத்தம் செய்து எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் புளி இஞ்சி தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டை துவையல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 184kcal | Carbohydrates: 3.6g | Protein: 16.44g | Fat: 3.7g | Sodium: 139mg | Potassium: 171mg | Fiber: 7.4g | Vitamin A: 69IU | Vitamin C: 327mg | Calcium: 24mg | Iron: 10mg

இதனையும் படியுங்கள் : ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!