- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
எப்பவுமே காலைல பிரேக் பாஸ்ட்க்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், பூரி அப்படின்னு செய்வோம் ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம குழந்தைகளுக்கு கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க பொதுவாக எல்லார் வீட்லயுமே இட்லி தோசைக்கு மாவு இருக்கும். அந்த மாதிரி இல்லாத சமயத்துல இந்த சுவையான ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். எல்லார் வீட்லயும் கண்டிப்பா அவல் இருக்கும் அப்படி இல்லனாலும் எப்பவுமே ஒரு பாக்கெட் வாங்கி வச்சுக்கோங்க. இந்த அவல் வைத்து நிறைய ரெசிபி செய்யலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்து பசிக்குது அப்படின்னு சொன்னாங்கனா இத வச்சு ஒரு சூப்பரான ரெசிபியை அவர்களுக்கு செஞ்சு கொடுக்கலாம்.
இப்ப நம்ம செய்ய போற இந்த அவல் முட்டை புட்டு ரெசிபி காலையில பிரேக்ஃபாஸ்ட்டுக்கும் செய்யலாம் ஸ்னாக்ஸ் ஆகவும் செய்யலாம் கண்டிப்பாக ரொம்ப அருமையாக இருக்கும். இரண்டு முட்டையும் அவலும் இருந்தால் போதும் இந்த ரெசிபியை சூப்பரா செய்யலாம். இந்த ரெசிபி கண்டிப்பா குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான முட்டை வைத்து செய்யக்கூடிய அவல் முட்டை புட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்ல அவல் இருந்தா இந்த அவல் கேசரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் அவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய பச்சையும் மிளகாய் சேர்த்து வதக்கியதும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும். பிறகு அவல் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான அவல் முட்டை புட்டு தயார்.






