- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
ஸ்கூல் போகும் மாணவர்களுக்கு என்ன லஞ்ச் கொடுப்பது என்று யோசிக்கும் நபரா நீங்கள்? இந்த அருமையான ரெசிபியை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் அடம் பிடித்து தினமும் செய்ய சொல்லி கேட்பார்கள். அப்படி என்ன ரெசிபி என்று கேட்கிறீர்களா? அவல் வைத்து செய்யப்படும் புலாவ். எப்படி செய்வது என்று பார்ப்போமா? புலாவ் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக தென் இந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான்.
பொதுவாக எல்லார் வீட்லயுமே இட்லி தோசைக்கு மாவு இருக்கும். அந்த மாதிரி இல்லாத சமயத்துல இந்த சுவையான ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். எல்லார் வீட்லயும் கண்டிப்பா அவல் இருக்கும் அப்படி இல்லனாலும் எப்பவுமே ஒரு பாக்கெட் வாங்கி வச்சுக்கோங்க. இந்த அவல் வைத்து நிறைய ரெசிபி செய்யலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்து பசிக்குது அப்படின்னு சொன்னாங்கனா இத வச்சு ஒரு சூப்பரான ரெசிபியை அவர்களுக்கு செஞ்சு கொடுக்கலாம்.
இப்ப நம்ம செய்ய போற இந்த அவல் புலாவ் ரெசிபி காலையில் பிரேக்ஃபாஸ்ட்டுக்கும், மதிய உணவிற்கு செய்யலாம் அல்லது ஸ்னாக்ஸ் ஆகவும் செய்யலாம் கண்டிப்பாக ரொம்ப அருமையாக இருக்கும். இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்யக்கூடிய ஒரே சாப்பாடு வகை இது தான். நாம் எப்போதும் போல் செய்யும் சாதாரண புலாவை விட இன்று நாம் கொடுக்கப்போகும் அவல் புலாவ் ரெசிபி மிகவும் வித்தியாசமாக இருக்கும். இப்போது சுவையான அவல் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : வீட்ல அவல் இருந்தா இந்த அவல் கேசரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் அவலை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமானதும் பெரிய வெங்காயம், காலிஃப்ளவர், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு, மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு நாம் எடுத்து வைத்துள்ள அவலை சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான அவல் புலாவ் தயார்.






