Advertisement
ஆன்மிகம்

வீட்டில் விளக்கு ஏற்றும் பொழும் இதை தெரிந்து கொண்டு ஏற்றுங்கள்!

Advertisement

பொதுவாக நம் வீட்டில் காலை மாலை என இருவேளையும் பூஜை செய்து மறக்காமல் ஏதாவது ஒரு விளக்கை ஏற்றி விடுவோம் எதற்காக விளக்கை ஏற்றுகிறோம் என்று பார்த்தால் நாம் பூஜை செய்யும்போது விளக்கேற்றும் போது அது எப்படி அங்கு இருக்கும் இருளை நீக்கி நமக்கு ஒளியே தருகிறதோ. அது போல நமது வாழ்விலும் நம் லட்சியங்களுக்கு நாம் பணம் சம்பாதிப்பதற்கு, நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இடையூறாக இருக்கும் கெட்ட சக்திகள், நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் போன்றவற்றை நம் வாழ்வில் இருந்து நீக்கிவிடும் இதற்காகவும் நாம் விளக்கு ஏற்றுகிறோம்.

அது போல நாம் பூஜை செய்யும் போது நம்முடைய குறை நிறைகளை கஷ்டங்கள் துன்பங்களை கடவுளிடம் சொல்லி அதிலிருந்து என்னை காப்பாற்றுங்கள், இதிலிருந்து என்னை விடுவிக்கவும். என நாம் மனதார பிரார்த்தனை செய்து கொள்வோம் அப்படி நாம் பிரார்த்தனை செய்யும்போது நாம் பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கில். நாம் யாரை நோக்கி பூஜை செய்கிறோமோ அந்த கடவுளே ஜோதி வடிவில் அமர்ந்து நம் பிரார்த்தனைகளை கேட்டு நிவர்த்தி செய்வார் என்பது ஐதீகம். இதற்காகவே நாம் பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுகிறோம் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.

Advertisement

விளக்கை குளிர்விப்பது

அப்படி நாம் வீட்டில் விளக்கு ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நாம் விளக்கு ஏற்றும் போது பயபக்தியோடு, பக்தி மனதோடு ஏற்றுவோம். ஆனால் அந்த விளக்கை அணைக்கும் போது ஒரு மலர் வைத்து விளக்கை குளிர வைத்து விடுவோம். ஆனால் விளக்கை இப்படி குளிர வைக்க கூடாது விளக்கை குளிர வைக்க மருதாணி மரக்குச்சி மாதுளை மர குச்சி அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட குச்சி ஒன்றை எடுத்துக் கொண்டு லட்சுமி தேவியை மனதில் வைத்து திரியை உள்ளெழுத்து விளக்கை குளிர வைக்க வேண்டும். இப்படி பல விஷயங்கள் விளக்கேற்றுவதில் அடங்கி உள்ளனர் அதில் விளக்கேற்றும் போது நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

Advertisement

பிரம்ம முகூர்த்தம்

நாம் காலையில் மாலையில் என இருவேளை விளக்கேற்றுவோம். சூரிய உதயம் ஆகும் பொழுதும், சூரியன் மறையும் பொழுதும் அந்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேலும் விளக்கு ஏற்றும் போது வீட்டின் வடக்கு பக்கம் வாசல் கதவு

Advertisement
இருந்தால் அதை அடைத்து விட்டு விளக்கு ஏற்ற வேண்டும். பின்பு நாம் சூரியன் உதயம் ஆவதற்கு 48 நிமிடங்கள் முன்பு பிரம்ம முகூர்த்த நேரம இந்த நேரத்தில் நாம் விளக்கு ஏற்றுவது. நம் வீட்டில் உள்ளவர்களுக்கு கல்வி அறிவு வேண்டி விளக்கேற்றுவதற்கான நேரம். காலையில் இப்படி பிரம்ம முகூர்த்த நேரத்தில் நான் தொடங்கும் காரியங்கள் எல்லாம் வெற்றியிலேயே போய் முடியும். அதனால் தான் இன்று வரை புது வீடு கட்டி குடியியேறுபவர்கள், நவகிரக பூஜை செய்பவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் செய்கிறார்கள்.

கோதுளி முகூர்த்தம்

அதேபோல மாலையில் சூரியன் மறைந்த பின்பு 48 மணி நிமிடங்கள் கோதுதுளி முகூர்த்தம் என்று சொல்வார்கள் இப்படி மாலையில் இந்த முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவது நமது வீட்டிற்கு செல்வ வளம் பெருக வேண்டும் என்பதற்காக. இப்படி நாம் விளக்கு ஏற்றும் போது “விளக்கே திருவிளக்கே” என்ற பாடலை பாடிக்கொண்டு விளக்கேற்றலாம். இந்த பாடலை பாட முடியாவிடில் எட்டு வகையான லட்சுமி இருக்கிறார்கள் அல்லவா அவர்களின் பெயரை சொல்லி போற்றி போற்றி என்று சொல்லலாம் அதாவது “அஷ்டலட்சுமி போற்றி போற்றி, மகாலட்சுமியே போற்றி போற்றி” என இதுபோன்று சொல்ல வேண்டும். இனி விளக்கு ஏற்றும் போது இதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

16 நிமிடங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

1 மணி நேரம் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

2 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

3 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

6 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

7 மணி நேரங்கள் ago