Advertisement
சைவம்

கையேந்திபவன் சுவையில் மொறு மொறுனு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்க!

Advertisement

கையேந்தி பாவங்களில் அடை தோசை மிகவும் சுவையாக இருக்கும். மொறு மொறுனு இருக்கும். அதே போல் வீட்டிலே நம்பளும் செய்து சாப்பிடலாம். அது எப்படி செய்வது என்று தான் இன்று பார்க்க போகிறோம்.

இந்த அடை தோசை மிகவும் ஆரோக்கியமானது குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

Advertisement

இந்த அடை தோசையுடன் இஞ்சி சட்னி செய்து சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். குழந்தைகளுக்கு தரும் போது வெள்ளம், சேர்த்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த அடை தோசை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமாக இருக்கும்.

அடை தோசை | Adai Dosai Recipe In Tamil

Advertisement
Print Recipe
கையேந்தி பாவங்களில் அடை தோசை மிகவும் சுவையாக இருக்கும். மொறு மொறுனு இருக்கும். அதே போல் வீட்டிலே நம்பளும் செய்து சாப்பிடலாம். அது எப்படி செய்வது என்று தான் இன்று பார்க்க போகிறோம்.
இந்த அடை தோசை மிகவும் ஆரோக்கியமானது குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
இந்த அடை தோசையுடன் இஞ்சி சட்னி செய்து சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். குழந்தைகளுக்கு தரும் போது வெள்ளம், சேர்த்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த அடை தோசை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமாக இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword adai dosai, அடை தோசை
Prep Time 4 hours 10 minutes
Cook Time 10 minutes
Total Time 5 hours 20 minutes
Servings 4 people

Ingredients

தேவையான பொருட்கள்:

  • கப் இட்லி அரிசி
  • ¼ கப் துவரம் பருப்பு
  • ¼ கப் பாசிப்பருப்பு
  • ¼ கப் கடலை
  • 3 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • வரமிளகாய் காரத்திற்கேற்ப
  • 10 பல் பூண்டு
  • டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
  • 30 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ½ கப் முருங்கை கீரை நறுக்கியது
  • ½ கப் தேங்காய் துருவல்
  • எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

செய்முறை:

  • முதலில் இட்லி அரிசி, கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பிறகு மற்றொரு பௌலில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
  • அடுத்து மிக்சி, அல்லது கிரைண்டரில் பூண்டு,சோம்பு, மற்றும் பருப்புடன் ஊறவைத்த வரமிளகாய் மட்டும் சேர்த்து வலு வலுனு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் ஊறவைத்த அரிசி சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து, பிறகு அதில் கடைசியாக ஊறவைத்த பருப்புகளை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். நைசாக அரைக்காமல் கொஞ்சம் கொர கொரனு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காய பொடி, சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, தேங்காய் துருவல், சேர்த்து கலந்து விடவும். முக்கியமாக மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக்கூடாது, தண்ணீராகவும் இருக்க கூடாது.
  • அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு மாவை எடுத்து ஊற்றி கரண்டியால் தட்டி விடவும். பிறகு அதில் சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுகளா சிவந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான அடை தோசை தயார்.
Advertisement
swetha

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

3 மணி நேரங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

4 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

4 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

6 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

9 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

9 மணி நேரங்கள் ago