- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்புச் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற ஏராளமான சத்துக்கள் இந்த கீரையில் அடங்கியுள்ளது. “கீரைகளின் ராணி” என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்கண்ணியே.
கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். பொன்னாங்கண்ணி சாப்பிடுபவர்களுக்கு பகலில் கூட நட்சத்திரம் தெரியும் என்ற வழக்கு மொழியும் உள்ளது. அந்த அளவிற்கு கண்களின் பேணிக் காக்கும். ஒரு முறை இந்த பொன்னாங்கண்ணி கீரை குழம்பை செய்து பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பொன்னாங்கண்ணி கீரை குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த குழம்பு சத்தானதும் கூட. அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரையில் எப்படி குழம்பு செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுடன் சாப்பிட ருசியான முருங்கை கீரை வேர்க்கடலை பிரட்டல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!
Ingredients
Method
முதலில் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சிறிய வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து துவரம் பருப்பை கழுவி சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.
பிறகு கீரையில் வேகவைத்த பருப்பு, சாம்பார் தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து கரைத்து வைத்த புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். குழி கரண்டி அளவு புளி தண்ணீர் போதும். குழம்பு கொதித்ததும் தாளித்ததை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பொன்னாங்கண்ணி கீரை குழம்பு தயார்.






