Home சைவம் பூரிக்கு ஏற்ற சுவையான வெள்ளை குருமா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

பூரிக்கு ஏற்ற சுவையான வெள்ளை குருமா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இன்று நாம் பூரி, சப்பாத்திக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வெள்ளை பூரி கிழங்கு மசாலா ரெசிபி பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். பொதுவாக நமது நாம் சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகள் செய்யும் போது அதனுடன் தொட்டு சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு குருமா தான் பெரும்பாலான வீடுகளில் செய்து பரிமாறுவார்கள். ஆனால் இன்று நாம் சுவையான வெள்ளை பூரி கிழங்கு மசாலா செய்து பார்க்க போகிறோம்.

இதையும் படியுங்கள் : சுவையான மசாலா பூரி செய்வது எப்படி ?

இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது போல் செய்து கொடுத்தால் உள்ளவர்களுக்கு விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு பூரி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு பூரி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த வெள்ளை பூரி கிழங்கு மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

-விளம்பரம்-
Print
No ratings yet

வெள்ளை பூரி குருமா | Poori Masala Recipe In Tamil

இன்று காலை உங்கள் வீட்டில் பூரி, அல்லது சப்பாத்தி செய்ய யோசிக்கிறீர்களா அப்போ அதற்கு உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு மாசலவைதான் விரும்பி சாப்பிடுவார்களா அப்படியானால் இந்த வெள்ளை பூரி குருமா செஞ்சி சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Prep Time5 mins
Active Time15 mins
Total Time21 mins
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Kuruma, குருமா
Yield: 4 people

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பெரியவெங்காயம்
  • 2 உருளைக்கிழங்கு வேகவைத்தது

அரைக்க தேவையானவை:

  • இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு
  • 3 தேக்கரண்டி தேங்காய் துருவல்
  • 3 பச்சை மிளகாய்

தாளிக்க தேவையானவை:

  • சோம்பு சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2 பட்டை
  • 3 லவங்கம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • பின் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் போதே வேகவைத்து மசித்த உருளை கிழங்கை சேர்த்து கலந்துவிடவும்.
  • குருமா கொஞ்சம் கெட்டியானதும் வேறு பாத்திரத்திற்கு மாத்தவும்.
  • இப்பொழுது சுவையான வெள்ளை பூரி குருமா தயார்.

Nutrition

Carbohydrates: 549g | Protein: 3g | Fat: 29g | Fiber: 7.2g

NO COMMENTS

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here