என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரை குறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு
இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு சுவையில் சௌசௌ கூட்டு செய்வது எப்படி ?
பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த பூசணிக்காய் பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். ஆகையால் இன்று இந்த பூசணிக்காய் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பூசணிக்காய் பொரியல் | Poosanikkai Poriyal Recie in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 250 கிராம் பூசணிக்காய்
- 2 உருளைககிழங்கு
- எண்ணெய் தேவையான அளவு
- ½ tsp கடுகு
- ½ tsp வெந்தயம்
- ½ tsp சீரகம்
- ½ tsp சோம்பு
- 4 வர மிளகாய்
- 1 பச்சை மிளகாய்
- 1 துண்டு துருவிய இஞ்சி
- 1 tsp மஞ்சள் தூள்
- ½ tsp மிளகாய் தூள்
- ½ tsp சீரகத்தூள்
- 1 tsp சர்க்கரை
- உப்பு தேவையன அளவு
- 1 கப் தண்ணீர்
- 1 கைப்பிடி கொத்தமல்லி
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டேபிள் ஸபூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சோம்பு, வெந்தயம், நான்கு வர மிளகாய் சேர்த்த வதக்கவும். பின் இதனுடன் ஒரு துண்டு துருவிய இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
- பின் இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் இரண்டு உருளைக்கிழங்கு, கால் கிலோ பூசணிக்காய் மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.
- பின் நாம் சேர்த்த பூசணிக்காய் நன்கு வதங்கி வந்ததும் ஒரு டீஸபூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் சீரகத் தூள், ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான உப்பு சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வதக்கவும்.
- பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கி வந்ததும் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி, தீயை மிதமாக ஏறிய விட்டு ஒரு பத்து நிமிஞங்கள் தண்ணீர் நன்கு வற்றும் வரை வேக வைத்து கொள்ளும்.
- அதன் பின்பு பத்து நிமிடங்கள் அனைத்து பொருட்களும் நன்கு வெந்து வந்தததும். நாம் தை்திருக்கும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தூவி கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான பூசணிக்காய் பொரியல் தயாராகிவிட்டது.