- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
முருங்கைக் கீரையில் எக்கச்சக்கமான சத்துக்கள் இருக்கு முருங்கைக்கீரை வச்சு முருங்கைக்கீரை சாம்பார், முருங்கைக்கீரை கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் அப்படின்னு எக்கசக்கமான ரெசிபி செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இப்ப நம்ம பொரி அரிசி வச்சு ஒரு சூப்பரான முருங்கைக்கீரை பொரியல் செய்ய போறோம். இது பாரம்பரியமான ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். முருங்கைக் கீரையில் ஒவ்வொருத்தர் பாசிப்பருப்பு சேர்த்து வைப்பாங்க ஒவ்வொருத்தர் துவரம் பருப்பு சேர்த்து வைப்பாங்க சிலர் என்ன பண்ணுவாங்கன்னா தேங்காய் துருவல் சேர்த்து செய்வாங்க. ஆனா இப்ப நம்ம பாரம்பரியமா அரிசியை வறுத்து பொறி அரிசி தூவி இந்த முருங்கைக்கீரை பொரியல் செய்ய போறோம்.
ரசம் சாதத்துக்கு சூப்பரா இருக்கும் காரக்குழம்பு சாதம் பருப்பு சாதம் எல்லாத்துக்குமே இந்த பொரியல் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. ஒரு தடவை இதை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. கீரை கண்டிப்பா வாரத்தில் ஒரு தடவ சேர்த்துக்கணும் அந்த வகையில முருங்கை கீரையை கண்டிப்பாக வாரத்தில் இரண்டு தடவை சேர்த்துக்கிட்டா இரும்பு சத்து குறைபாடு வரவே வராது. அதுலையும் எப்பவும் ஒரே மாதிரியா செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான பொரி அரிசி முருங்கைக்கீரை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சத்தான முருங்கை கீரை வச்சு முருங்கைக்கீரை சட்னி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் அரிசி சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் போட்டு தாளித்து விட்டு இடித்த பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கி உப்பு போட்டு வதக்கவும்.
கீரை நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து இறக்கினால் சுவையான பொரி அரிசி முருங்கை கீரை பொரியல் தயார்.






