நாவில் சுவை ஊறும் ருசி மிகுந்த ‘உருளைக்கிழங்கு பர்பி’ சில நிமிடத்தில் சுலபமாக இப்படி செய்து பாருங்கள்!!!

- Advertisement -

பொதுவாக அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு காய்கறி என்றால் அது உருளைக்கிழங்கு என்று சொல்லலாம். எந்த ஒரு குழம்பு செய்தாலும் இந்த உருளைக்கிழங்கை வறுத்து கொடுத்தால் போதும் குழந்தைகள் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் இந்த உருளைக்கிழங்கு வறுவல் செய்து கொடுத்தால் போதும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒன்றும் கூட. இந்த உருளைக்கிழங்கை வைத்து நாம் பலவிதமான உணவுகளை செய்யலாம். எடுத்துக்காட்டாக ஆலு பரோட்டா, உருளைக்கிழங்கு ரோல், உருளைக்கிழங்கு ரோஸ்ட், உருளைக்கிழங்கு பால் கறி, உருளைக்கிழங்கு சாதம் என உருளைக்கிழங்கு வைத்து எக்கச்சக்கமான உணவுகளை நம்மால் தயாரிக்க முடியும். நாமும் எக்கச்சக்கமான உணவுகளை சாப்பிட்டும் இருப்போம். ஆனால் உருளைக்கிழங்கு வைத்து நாம் பர்பி செய்து சாப்பிட்டு இருக்க மாட்டோம்.

- Advertisement -

தேங்காய் பர்பி என்று சொன்னால் கூட அனைவருக்கும் தெரியும். ஆனால் உருளைக்கிழங்கு பர்பி கொஞ்சம் வித்தியாசமானதாக உங்களுக்கு தோன்றும். ஆனால் உண்மையில் இந்த உருளைக்கிழங்கு பர்பி நீங்கள் ஒரு முறை செய்து சாப்பிட்டு பார்த்தால் தேங்காய் பர்பி அளவிற்கு உங்களுக்கு அது பிடித்து விடும். அந்த அளவுக்கு இந்த உருளைக்கிழங்கு பர்ஃபி சுவையானதாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு பர்பி செய்வதற்கு பொருட்களும் மிகவும் குறைவாகவே தேவைப்படும். நேரமும் குறைவாகவே தேவைப்படும். வாங்க இந்த உருளைக்கிழங்கு பர்பி சுவையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

உருளைக்கிழங்கு பர்பி | Potato Burfi Recipe In Tamil

மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒன்றும் கூட. இந்த உருளைக்கிழங்கை வைத்து நாம் பலவிதமான உணவுகளைசெய்யலாம். எடுத்துக்காட்டாக ஆலு பரோட்டா, உருளைக்கிழங்கு ரோல், உருளைக்கிழங்கு ரோஸ்ட்,உருளைக்கிழங்கு பால் கறி, உருளைக்கிழங்கு சாதம் என உருளைக்கிழங்கு வைத்து எக்கச்சக்கமானஉணவுகளை நம்மால் தயாரிக்க முடியும். நாமும் எக்கச்சக்கமான உணவுகளை சாப்பிட்டும் இருப்போம்.ஆனால் உருளைக்கிழங்கு வைத்து நாம் பர்பி செய்து சாப்பிட்டு இருக்க மாட்டோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Dessert, snacks
Cuisine: tamil nadu
Keyword: Potato Burfi
Yield: 4
Calories: 263kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 1/4 கிலோ சர்க்கரை
  • 100 கிராம் ரவை
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

  • ஒரு கடாயில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கையும் வேக வைத்து ஆறியவுடன் தோல் உரித்து மசித்து கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரையை சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறவேண்டும்.
  • உருளைக்கிழங்கும் சர்க்கரையும் சேர்ந்து நன்றாக ஒன்று சேர்ந்து வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
  • பின்பு ஏலக்காய் தூளையும் நெய்யும் சேர்த்தும் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  •  
    பத்து நிமிடங்கள் நன்றாக கிளறியதும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை சேர்த்து இரண்டு மணி நேரம் கழித்து உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டினால் சுவையான உருளைக்கிழங்கு பர்பி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 1g | Cholesterol: 15mg | Sodium: 132mg | Potassium: 428mg

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் சாக்லேட் தேங்காய் பர்பி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!