Advertisement
சைவம்

கல்யாண வீட்டு உருளைகிழங்கு மிளகு வறுவல் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்!!!

Advertisement

கல்யாண வீட்டு மிளகு உருளைக்கிழங்கு வறுவல் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும் கல்யாண வீட்டில் செய்யும் சைடிஷ் உணவுகளுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படி கல்யாண வீடுகளில் செய்வது போன்ற உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ள இருக்கின்றோம். உணவு பதார்த்தங்களில் அனைவருக்கும் மிகவும் பிடித்த வறுவல் என்று கூறினால் அது உருளைக்கிழங்கு வறுவல் தான்.

அப்படிப்பட்ட உருளைக்கிழங்கு வறுவல் என்னத்தான் வீட்டில் ருசியாக செய்தாலும் கல்யாண வீடுகளில் கிடைப்பது போன்ற ஒரு ருசி நம் இல்லங்களில் செய்யும் பொழுது கிடைப்பதில்லை. அப்படி கல்யாண வீட்டு ருசியில் அப்படியே இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவலை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடித்தமான ஒரு கிழங்கு வகையாக இருருப்பது உருளைக்கிழங்கு தான்.

Advertisement

அப்படிப்பட்ட உருளைக்கிழங்கு குழம்பு வைப்பது விட அவர்களுக்கு மிகவும் பிடித்த பதார்த்தம் என்ன என்றால் வறுவல் தான். இந்த உருளைக்கிழங்கை நன்றாக மொறு மொறுவென்று வறுத்துக் கொடுக்கும் பொழுது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாய் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது எப்பொழுதும் சாப்பிடுவதை விட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். இந்த கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மிளகு வறுவலை அனைத்து வகையான சாதத்திற்கும் சைட் டிஷ் ஆக தொட்டுக் கொள்ளலாம்.

ருசியான கல்யாண வீட்டு விருந்துகளில் கிடைக்க கூடிய சுவையில் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

உருளைகிழங்கு மிளகு வறுவல் | Potato Pepper Fry In Tamil

Print Recipe
கல்யாணவீட்டு மிளகு உருளைக்கிழங்கு வறுவல் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும் கல்யாண வீட்டில் செய்யும் சைடிஷ் உணவுகளுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படி கல்யாண வீடுகளில் செய்வது போன்ற உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ள இருக்கின்றோம். உணவு பதார்த்தங்களில் அனைவருக்கும் மிகவும் பிடித்த வறுவல் என்று கூறினால் அது உருளைக்கிழங்கு வறுவல் தான். ருசியான கல்யாண வீட்டு விருந்துகளில் கிடைக்க கூடிய சுவையில் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Potato Pepper Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 112

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 3 உருளைகிழங்கு
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயதூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 துண்டு பட்டை
  • 1 ஸ்பூன் கடுகு

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக்
    Advertisement
    கொள்ளவும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் மிளகு, கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு சீரகம், சோம்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வறுத்து எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும் பட்டை ,கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு பொடியாக  நீளவாக்கில் அறிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளிப் பழத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளிப்பழம் நன்றாக வதங்கிய பிறகு அதில் உப்பு சேர்த்து கிளறிவிட்டு பெருங்காயத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை சென்ற பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக ஒரு கிளறு கிளறி விடவும்.
  • பிறகு அரைத்து பொடித்து வைத்துள்ள மசாலா பொடியில் இருந்து பாதியை மட்டும் கடாயில் சேர்த்து நன்றாக வெங்காயம் தக்காளி உடன் கலக்குமாறு கிளறி விடவும்.
  • பிறகு வேகவைத்து எடுத்துள்ள உருளைக்கிழங்குகளை பொடியாக நறுக்கி இந்த மசாலாக்களுடன் சேர்த்து நன்றாக ஒரு கிளறு கிளறி விடவும் .
  • பின் மீதம் வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவும். உருளைக்கிழங்கும் மசாலாக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து நன்றாக வெந்து சூழ வந்த பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மிளகு வறுவல் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Fat: 2g | Sugar: 1g
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

5 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

5 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

6 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

8 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

9 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

11 மணி நேரங்கள் ago