உருளைக்கிழங்கு பொரியல் அப்படினா யாருக்கு தான் பிடிக்காது. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே உருளைக்கிழங்கு ப்ரை அப்படின்னா ரொம்ப பிடிக்கும். அதுல இன்னிக்கி நம்ம உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரைதான் பாக்க போறோம். இதுக்கு ஒரு சின்ன மசாலா அரைச்சு போட்டா டேஸ்ட் பயங்கர ருசியா இருக்கும்.
இந்த உருளைக்கிழங்கு ஃப்ரை நம்ம ரசம் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் வேற எந்த சைட் டிஷ்மே தேவைப்படாது அவ்வளவு ருசியா இருக்கும். உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு உருளைக்கிழங்கு ப்ரை செய்யும்போது எப்போதும் ஒரே மாதிரியா செய்வீங்களா ?
அப்போ ஒரு தடவை மாத்தி இந்த சிம்பிளான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செஞ்சு பாருங்க. தயிர் சாதத்துக்கு எல்லாம் ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா உருளைக்கிழங்கு வறுவல் செய்யாம இந்த செய்முறையில் செஞ்சு பாருங்க. இந்த ஒரு ஃப்ரை செஞ்சு கொடுத்தா நீங்க என்ன சாப்பாடு குழந்தைகளுக்கு கொடுத்து இருந்தாலும் அதை காலி பண்ணிட்டு தான் வருவாங்க அதுக்கு காரணம் வந்து உருளைக்கிழங்கு வறுவல் தான். வாங்க இந்த உருளைக்கிழங்கு வருவல் எப்படி ரொம்பவே டேஸ்டியா செய்றதுன்னு பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு பெப்பர் ரோஸ்ட் | Potato Pepper Roast Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கி சின்ன உருளைக்கிழங்கு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகு
- 2 கொத்து கறிவேப்பிலை
- 4 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
செய்முறை
- உருளைக்கிழங்கு வேக வைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு மிக்சி ஜாரில் சீரகம் மிளகு கருவேப்பிலை பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- வேகவைத்த உருளைக்கிழங்கைத் சேர்த்து வைக்க மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்றாக கிளறியதும் இறுதியாக அரிசி மாவு சேர்த்து நன்றாக கிளறி இருக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பெப்பர் ரோஸ்ட் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : குழந்தைகளுக்கு பிடித்த செட்டிநாடு ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்கள்!!