- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- north india
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் உருளைக்கிழங்கு வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று வறுவல், பொரியல் என்று செய்யாமல் வித்தியாசமாக ஒன் பாட் உருளைக்கிழங்கு புலாவ் செய்யுங்கள். குறிப்பாக உருளைக்கிழங்கை கொண்டு புலாவ் செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும்.
ஒரே ஒருமுறை இந்த உருளைக்கிழங்கு புலாவ் செய்து கொடுங்கள், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் உருளைக்கிழங்கில் சாதம் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகளும் டிபன் பாக்ஸை காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி.
உங்க குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம் அதற்கு இது தான் சரியான ரெசிபி. இப்போது சுவையான உருளைக்கிழங்கு புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் முந்திரி பருப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை சற்று பெரியதாக நறுக்கி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ, சோம்பு சேர்த்து அதனுடன் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், புதினா, பச்சை பட்டாணி, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை நன்கு வதங்கியதும் பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து சிறிதளவு நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி, வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு புலாவ் தயார்.






