- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- curry
உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காரசாரமான ஸ்டைலில் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு செய்யுங்கள்.
இந்த புளிக்குழம்பு மிகவும் டேஸ்டியாக இருக்கும். முக்கியமாக இப்படி உருளைக்கிழங்கு ரெசிபி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கை கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு உருளைக்கிழங்கு புளிக்குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த உருளைக்கிழங்கு புளிக்குழம்பு இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான உருளைக்கிழங்கு புளிக்குழம்பை சில நிமிடங்களில் வீட்டில் ஊள்ள பொருட்களை வைத்தே சுலபமாக செய்திடலாம். இந்த குழம்பு சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான உருளைக்கிழங்கு புளிக்குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க கடலைப்பருப்பு குழம்பு இப்படி வைத்து பாருங்கள், சாப்பிட அருமையாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து விடவும்.
பின் புளி தண்ணீர் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து விடவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்து பச்சை வாசனை போனதும் சிறிதளவு நெய் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு புளிக்குழம்பு தயார்.






