- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பெரும்பாலும் முட்டை வச்சு ஆம்லெட் போடும் போது நிறைய பேரு விரும்பி சாப்பிடுவாங்க ஆனா இப்போ சிக்கன் வச்சு ஆம்லெட் போடலாம். அது நிறைய பேரு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இறால் முட்டையோட சேர்த்து இந்த மாதிரி ஒரு ஆம்லெட் செஞ்சு பாருங்க ரொம்பவே வித்தியாசமா டேஸ்டா இருக்கும். சுட சுட சாதத்துல அந்த ஆம்லெட் வச்சு அப்படியே செய்து சாப்பிடலாம். சாம்பார் சாதத்துக்கு கறி குழம்புக்கு தயிர் சாதத்துக்கு எல்லாத்துக்குமே இந்த ஆம்லெட் ரெசிபி ரொம்பவே டேஸ்டா இருக்கும்.
ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக ரொம்பவே ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ஆம்லெட் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப வித்தியாசமான இந்த ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும். இந்த ஒரு ரெசிபி கண்டிப்பா யாருக்குமே பிடிக்காம போகாது எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
எப்பவுமே ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இத அப்படியே காலைல பிரேக்ஃபாஸ்ட்க்கு கூட சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பராகவும் வயிறு நிரம்பியும் இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான இறால் ஆம்லெட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் ஃப்ரைடு ரைஸ்
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள இறால் சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு கடாயில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அரைவேக்காடு வெந்ததும் அதனை கலந்து வைத்துள்ள முட்டையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் ஆக ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சுவையான இறால் ஆம்லெட் தயார்.






