- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து கிரேவி, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் இறால் மிளகு பிரட்டல் இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். சிக்கன், மட்டன் சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வார இறுதியில் இறால் வாங்கி மிளகு பிரட்டல் செய்யுங்கள். இறாலை சுத்தம் செய்வது கடினம் என நினைத்து பலரும் இதை வாங்கி சமைப்பது கிடையாது. மாறாக ஹோட்டல்களில் விற்கப்படும் இறால்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். அதிக செலவு செய்து வயிறு நிரம்பாமல் அரைகுறையாக சாப்பிடுவதற்கு பதிலாக நாமே வீட்டில் சமைத்து வயிறார சாப்பிடலாம்.
இறாலை சுத்தம் செய்ய கற்றுக் கொண்டால் போதும், அடுத்த பத்து நிமிஷத்தில் இந்த இறால் பிரட்டலை செய்து முடித்து விடலாம். இந்த இறால் மிளகு பிரட்டல் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த இறால் பிரட்டல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த பிரட்டல் இறால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடும் வகையில் இருக்கும். இறால் குழம்பு சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு சூப்பரான அசைவ உணவாகும். இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிம்பிளான இறால் டிக்கா இனி கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே இப்படி செய்து பாருங்கள்!!!
Ingredients
Method
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து விட்டு தண்ணீரில் அலசி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். சோம்பு தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் வேக விடவும்.
பின் இறால் நன்கு வெந்ததும் மிளகு தூள், சோம்பு தூள், நறுக்கிய மல்லி இலை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான இறால் மிளகு பிரட்டல் தயார்.






