கொழுப்பை கரைக்கும் பூசணிக்காய் சூப், ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க. சுவையான சூப் ரொம்பவே நல்ல மருந்தா பயன்படும்!!

- Advertisement -

சூப் அப்படி என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சூப் பல வெரைட்டிகள் இருக்கு அசைவ சைவ சூப் இப்படி நிறைய இருந்தாலும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை சூப் தான். அப்படி அந்த சூப்பகளில நம்ம உடலுக்கு நன்மை தரக்கூடிய கூடிய ஒரு சூப் அப்படின்னா அது பூசணிக்காய் சூப் அப்படின்னு சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த பூசணிக்காய் சூப் சாப்பிடும்போது அது உடல் எடையை குறைப்பதற்கு உதவுது. ஏனெனில் பூசணிக்காயில்  ஸீரோ அளவு கொழுப்பு  இருக்கறதுனால இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதற்கு உதவுது. அது மட்டும் இல்லாம இந்த பூசணிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாமே சரியாகிறது. சிறுநீர் பிரியாமல் பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருக்குமே பூசணிக்காய்  ஜூஸ் ரொம்பவே நல்ல மருந்தா பயன்படுது.

- Advertisement -

அப்படி இந்த பூசணிக்காயில் நம்ம ருசியான ஒரு சூப் வெச்சி குடிக்க போறோம். இந்த மழை காலத்துக்கு ஏத்த மாதிரி ஈவினிங் டைம்ல இப்படி பூசணிக்காய் வீட்ல இருக்குறப்போ சூப்பரா சூப் செய்து கொடுத்தீங்கன்னா ரொம்பவே ருசியாவும் சுவையாகவும் இருக்கும். இந்த பூசணிக்காய் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறதுனால உணவுல வாரத்துக்கு ஒரு தடவையாவது பூசணிக்காய் சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இப்படி ருசியான இந்த பூசணிக்காயில் ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி சூப் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

பூசணிக்காய் சூப் | Pumpkin Soup Recipe In Tamil

பூசணிக்காய் சூப் சாப்பிடும்போது அது உடல் எடையை குறைப்பதற்கு உதவுது. ஏனெனில் பூசணிக்காயில்  ஸீரோ அளவு கொழுப்பு  இருக்கறதுனால இது உடலில் உள்ள மெட்ட பாலிசத்தை மேம்படுத்துவதற்கு உதவுது. அது மட்டும் இல்லாம இந்த பூசணிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாமே சரியாகிறது. சிறுநீர் பிரியாமல் பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருக்குமே பூசணிக்காய்  ஜூஸ் ரொம்பவே நல்ல மருந்தா பயன்படுது. இப்படி ருசியான இந்த பூசணிக்காயில் ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி சூப் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Appetizer
Cuisine: tamil nadu
Keyword: pumpkin soup
Yield: 4
Calories: 22kcal

Equipment

  • 1 அகலமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி பூசணிக்காய்
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 1/4 ஸ்பூன் சீரகதூள்
  • 1/4 ஸ்பூன் சோம்பு தூள்
  • 1/4 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பூசணிக்காயை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது மிகவும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் இடித்து வைத்துள்ள பச்சை மிளகாய், பூண்டைசேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கைப்பிடி அளவிற்கு சற்று கூடுதலாக பொடியாக நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளைசேர்த்து நன்றாக வதக்கி நீர் சேர்த்து வேக வைக்கவும். பூசணிக்காய் நன்றாக கையால் நசுக்கினால்மசியும் அளவிற்கு வெந்த பிறகு லேசாக நசுக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
  • சிறிது பூசணிக்காயை அந்த நீரிலேயே இருக்கும் படி விட்டு முக்கால் அளவிற்கான பூசணிக்காயை எடுத்து ஆறவைத்துவிட வேண்டும்.பூசணிக்காய் ஆறிய பிறகு அவைகளை மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அடுப்பில் வைத்துள்ள பூசணிக்காய் வேக வைத்த நீரில் மசித்து வைத்துள்ள பூசணிக்காய் சேர்த்துகொள்ள வேண்டும். பூசணிக்காய் வேக வைத்த தண்ணீரோடு நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
  • பூசணிக்காய் சூப் கொதித்து வரும் பொழுது அதில் தேவையான அளவு உப்பு , மிளகு தூள் ,  கொத்தமல்லி தழைகள் தூவி சூடாக பரிமாறினால் சுவையான ஆரோக்கியமிக்க பூசணிக்காய் சூப் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 22kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 2g

இதையும் படியுங்கள் : கல்யாண வீடுகளில் செய்யப்படும் பூசணி அல்வா தளதளன்னு ரொம்ப சுவையா வீட்டிலேயே சில நிமிடத்தில் இப்படி செய்யலாம்!