- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
இந்தப் திடீர் புளி சாதம் செய்முறை தெரிஞ்சி வச்சுகிட்டா போதும். சொடக்கு போடுற நேரத்துல புளிசாதம் செய்து விடலாமே. ஆனால் அதற்கு கட்டாயமாக சாதம் வடித்து வைத்து இருக்க வேண்டும். வடித்த சாதம் இருந்தால் நிமிடத்தில் இந்த திடீர் புளி சாதத்தை தயார் செய்துவிடலாம்.
குறிப்பாக நீங்கள் பேச்சிலராக இருந்தால் உங்களுக்கு இது மிகமிக உபயோகமானதாக இருக்கும். பேச்சிலர்ஸ்கு மட்டும்தானா? இல்லத்தரசிகளுக்கு இல்லையா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். யார் வேண்டும் என்றாலும் இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.புளியோதரை பொடி , புலி கரேச்சல் முன்கூட்டிய செய்து வாய்க்கு அவசியமும் இல்லை .நம்முடைய வீட்டில் சாதம் குழம்பை கூட சுலபமாக செய்து விட முடியும். ஆனால், பக்குவமான முறையில் புளி சாதம் செய்வது என்றால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
நம்முடைய வீட்டில் எப்படித்தான் புளிசாதம் செய்தாலும், கோவிலில் கொடுக்கும் அளவிற்கு அந்த புளி சாதம் சுவையாக இல்லை என்ற குறை கட்டாயம் இருக்கும். அதே சமையல்.. அந்த புலி சதா போடி, கரைச்சல் என்று வேலையும் அதிகம். ருசியான புளி சாதத்தை, நம்முடைய வீடுகளில் சில நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இதையும் படியுங்கள் : முட்டை புளிக்கறி ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!
Ingredients
Method
புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து,வடிகட்டவும்,
வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். மிளகாயை கிள்ளி வைக்கவும்,
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
புளி பச்சை வாசனை போய், நன்கு கொதித்ததும், சாதம் சேர்த்து கிளறவும். சாதம் நன்கு வதங்கியதும் இறக்கவும்.






