- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம். மிக மிக சுலபமான முறையில் முள்ளங்கி சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முள்ளங்கி சாதம் என்றதும் பலர் அதன் வாசனையை நினைத்து முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த முள்ளங்கியை துருவி செய்வதால், வாசனை அதிகம் வராது. முள்ளங்கியில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் பல நிறைந்துள்ளன.
கால்சியம், வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், நியாசின், தியாமின், வைட்டமின் B6, ஃபோலேட், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது முள்ளங்கி. நீர்ச்சத்து அதிகம் உள்ள இந்த முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பலன் அளிக்கிறது. இவ்வாறு உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் முள்ளங்கி கொண்டுள்ளதால், தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பெரும்பாலான வீடுகளில் முள்ளங்கி சமைப்பதை தவிர்த்தே வருகின்றனர். ஆனால் இது போன்ற சுவையில் முள்ளங்கியை சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : வித்தியாசமான முள்ளங்கி வறுவல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனிமேல் இப்படிதான் அடிக்கடி செய்வீர்கள்!!!
Ingredients
Method
முதலில் முள்ளங்கியை தோல் நீக்கி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, முள்ளங்கி இலை ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் அரிசியை நன்கு அலசி சேர்த்து, அதனுடன், தேங்காய் பால், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் முள்ளங்கி துருவல் மற்றும் முள்ளங்கி இலைகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலந்து வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து வறுத்த முந்திரி, மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி சாதம் தயார்.






