ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாக பல காலங்களாக இருந்து வருகிறது. இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு காலை உணவாக ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் இப்பொழுது யாரும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள். நீங்கள் வீட்டிலேயே இனி ஆப்பம் செய்து சாப்பிடலாம் எளிமையான முறையில் மாவு தயார் செய்யலாம்.
இதையும் படியுங்கள் : பூ போன்ற மென்மையான இடியாப்பம் செய்வது எப்படி ?
இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ராகி ஆப்பம் செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை இந்த ராகி ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த ராகி ஆப்பம் பிடித்த உணவாக மாறிவிடும். அதனாலன இன்று இந்த சுவையான ராகி ஆப்பம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
ராகி ஆப்பம் | Ragi Appam Recipe in Tamil
Equipment
- 1 ஆப்ப கடாய்
- 1 பெரிய பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் சோறு
- 1 கப் துருவிய தேங்காய்
- 2 கப் ராகி மாவு
- 2 கப் தண்ணீர்
- ½ tbsp உப்பு
செய்முறை
- முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு கப் சாதம் மற்றும் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் இரண்டு கப் அளவிற்கு ராகி மாவு மற்றும் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் அரைத்த ராகி மாவை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடுங்கள். பின்பு இவ்வாறு தயார் செய்த மாவை ஒரு இரவு முழுவதும் பாத்திரத்தை மூடி வைத்து புளிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் காலையில் மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும் பின்னர் கரண்டியை வைத்து மாவை அடிப்பகுதி வரை நன்றாக கலக்கி விட்டு ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து ஆப்பக்கடை நன்கு சூடே ஏறியதும் இரண்டு கரண்டி மாவை ஊற்றி கடாய் கையில் எடுத்து மாவை நல்லா சுற்றி விடுங்கள்.
- பின் ஆப்ப கடாயை மூடி வைத்து இரண்டு நிமிடம் கழித்து ஆப்பம் என்று வெந்து விடும். இவ்வாறாக மீதி இருக்கும் ஆபத்தையும் தயார் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- இந்த ஆப்பத்துடன் தேங்காய் பால் ஊற்றி சாப்பிடும் பொழுது இந்த ராக ஆப்பம் அற்புதமான சுவையில் இருக்கும் அவ்வளவுதான் சுவையான ராகி ஆப்பம் இனிதே தயாராகிவிட்டது.