- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் நூடுல்ஸ் சாண்ட்விச் மேகி ப்ரைடு ரைஸ் இந்த மாதிரி ரெசிபிஸ் தான் ரொம்ப ரொம்ப பிடிக்குது. ஆனா குழந்தைகளுக்கு எப்பவுமே இந்த ரெசிபிஸ் கடைகளில் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே குழந்தைகளுக்கு நம்ம செஞ்சு கொடுக்கலாம். ஆனா நூடுல்ஸ் மைதா மாவில் தயார் செய்தது என்பதால் அடிக்கடி குழந்தைகளுக்கு நம்ம கொடுக்கக் கூடாது அதற்கு பதிலா சிறுதானியங்களில் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் செஞ்சு கொடுக்கலாம்.
அந்த வகையில இன்னைக்கு நம்ம கேழ்வரகும் சோளமும் வைத்து ஒரு சூப்பரான நூடுல்ஸ் ரெசிப்பி செய்ய போறோம்.இந்த நூடுல்ஸ் ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். அதே நேரத்துல ஆரோக்கியமானதாகவும் இருக்கும். கேழ்வரகு மாவையும் சோளமாவையும் கலந்து சிறிய முறுக்கு அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்து இந்த ருசியான ரெசிபியை செய்யலாம். சாப்பிடுறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். இதுல உங்களுக்கு தேவையான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இதுல நம்ம கேரட் குடைமிளகாய் முட்டைக்கோஸ் இதெல்லாம் சேர்த்து செய்ய போறோம். சுவையான இந்த ரெசிபியை குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம். டின்னர் ஆகவும் கொடுக்கலாம் காலையில பிரேக்பாஸ்ட்டுக்கும் கொடுக்கலாம். எல்லாத்துக்குமே சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஃப்ரெஷ்ஷா இந்த நூடுல்ஸ் செஞ்சு அதுக்கப்புறம் மசாலாக்கள் சேர்த்து செய்ய போறதால டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பாக எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
முக்கியமா குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஆரோக்கியமாக செஞ்சு கொடுக்கும் போது குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு கொடுக்கும்போது ரொம்ப ரொம்ப கம்மியா காரம் சேர்த்துக்கோங்க இதுல கரம் மசாலாவும் மிளகாய் தூளும் பச்சை மிளகாயும் காரத்துக்காக சேர்க்க போறோம். ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு சோளம் நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பேச்சுலர்ஸ் சுவையான நூடுல்ஸ் எளிதாக செய்வது எப்படி ?
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் சோள மாவு கேழ்வரகு மாவு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
அதனை சிறிய முறுக்கு அச்சில் சேர்த்து இட்லி பாத்திரத்தில் பிழிந்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது நூடுல்ஸ் தயாராகிவிட்டது.
ஒரு பாத்திரத்தில் தக்காளி சேர்த்து வெந்ததும் தோல் உரித்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு நீளவாக்கில் நறுக்கிய முட்டைக்கோஸ் கேரட் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து வைத்த தக்காளி மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து வதங்கிய பிறகு ஒரு டீஸ்பூன் சர்க்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துள்ள நூடுல்ஸ் சேர்க்கவும்.
நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கேழ்வரகு சோளம் நூடுல்ஸ் தயார்.






