காலை உணவுக்கு சத்தான இந்த ராகி கஞ்சி செஞ்சு குடிச்சு பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!

- Advertisement -

என்னதான் நம்ம இன்னைக்கு பீட்சா பர்கர் பிரட் டோஸ்ட் பேன் கேக் அப்படின்னு டிஃபரண்டா நிறைய ரெசிபிஸ நம்ம காலை உணவா சாப்பிட்டாலும் நம்மளோட பாரம்பரியமான சிறுதானியங்கள்ல செஞ்சு உணவுகள் ரொம்பவே உடம்புக்கு ஆரோக்கியமானது. கருப்பு கவுனி, ராகி ,வரகு, சாமை ,திணை, குதிரைவாலி அப்படின்னு நிறைய சிறுதானியங்கள் இருக்கு. இந்த சிறுதானியங்கள்ல நம்ம கஞ்சி வச்சு சாப்பிட்டா அது இன்னும் ரொம்பவே சத்தானது.

-விளம்பரம்-

அந்த வகையில் ரொம்பவே ஆரோக்கியமான ராகி கஞ்சி தான் எப்படி செய்வது என்று பார்க்கப் போறோம் ‌ காலைல எழுந்த உடனே டீ காபிக்கு பதிலா இந்த ராகி கஞ்சி குடிச்சா உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியமானது. ஒருவேளை நீங்க டீ காபிக்கு பதிலா வேறு ஏதாவது தேடுறீங்க அப்படின்னா இந்த ராகி கஞ்சியை செஞ்சு குடிச்சு பாருங்க. இத டீ காபிக்கு பதிலா மட்டும் இல்லாம காலை உணவாகவும் குடிக்கலாம்.

- Advertisement -

இந்த ராகி கஞ்சி ரெண்டு விதமா செய்யலாம் ஒன்னு காரமா செய்யலாம் இன்னொன்னு இனிப்பா செய்யலாம். இன்னைக்கு நம்ம குழந்தைகளுக்கும் புடிச்ச மாதிரி இனிப்பா தான் இந்த ராகி கஞ்சி செய்ய போறோம். இந்த மாதிரி பாரம்பரியமான உணவுகள் எல்லாம் உங்க குழந்தைகளுக்கு பிடிக்காது அப்படின்னா ஒரு தடவ இந்த ராகி கஞ்சிகள் செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் திரும்பி திரும்பி செய்ய சொல்லி குடிப்பாங்க அந்த அளவுக்கு இந்த ராகி கஞ்சியோட டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

ஒருவேளை காலையில குழந்தைங்க இத குடிக்கலனா ஈவினிங் டயத்துல ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா இந்த ராகி கஞ்சியை நீங்கள் செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே ஆரோக்கியமானது அப்படின்றதால ஈஸியா நீங்க அதை செஞ்சு கொடுத்தா குடிச்சிட்டு வாங்க டேஸ்டும் இனிப்பா ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான ஈஸியாக செய்யக்கூடிய சத்தான ராகி கஞ்சி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

ராகி கஞ்சி | Ragi Kanji Recipe In Tamil

ராகி கஞ்சி ரெண்டு விதமா செய்யலாம் ஒன்னு காரமா செய்யலாம் இன்னொன்னு இனிப்பா செய்யலாம். இன்னைக்குநம்ம குழந்தைகளுக்கும் புடிச்ச மாதிரி இனிப்பா தான் இந்த ராகி கஞ்சி செய்ய போறோம்.இந்த மாதிரி பாரம்பரியமான உணவுகள் எல்லாம் உங்க குழந்தைகளுக்கு பிடிக்காது அப்படின்னாஒரு தடவ இந்த ராகி கஞ்சிகள் செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் திரும்பிதிரும்பி செய்ய சொல்லி குடிப்பாங்க அந்த அளவுக்கு இந்த ராகி கஞ்சியோட டேஸ்ட் ரொம்பவேஅட்டகாசமா இருக்கும். ராகி கஞ்சியை நீங்கள் செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே ஆரோக்கியமானதுஅப்படின்றதால ஈஸியா நீங்க அதை செஞ்சு கொடுத்தா குடிச்சிட்டு வாங்க டேஸ்டும் இனிப்பாரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Appetizer
Cuisine: tamil nadu
Keyword: Ragi Kanji Recipe In Tamil
Yield: 4
Calories: 160kcal

Equipment

  • 1 அடி கனமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 3 டேபிள்ஸ்பூன் ராகி மாவு
  • 1/4 லிட்டர் பால்
  • 2 டம்ளர் தண்ணீர்
  • 1 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் நெய்
  • 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை குங்குமப்பூ

செய்முறை

  • முதலில் ராகி மாவில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். கலந்து வைத்துள்ளமாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
  • பத்து நிமிடங்களுக்குபிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு பால் சேர்த்து கைவிடாமல் ஒரு பத்து நிமிடங்கள் கிளறவும்
  • நன்றாக கிளறிய பிறகு அதனுடன் வாசனைக்கு குங்குமப்பூ சேர்த்து இறக்கினால் சுவையான ராகி கஞ்சி தயார்.
  • குங்குமப்பூ இருந்தால் சேர்த்துக் கொள்ளவும் இல்லை என்றால் சேர்க்காமல் இருக்கலாம்

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 56g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g

இதையும் படியுங்கள் : சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை ராகி மாவுல இப்படி கேக் செஞ்சு பாருங்க வாயில் வைத்தவுடன் கரையும்!

-விளம்பரம்-