வித்தியாசமான ஆரோக்கியம் நிறைந்த ‘ராகி சூப்’! ஒருமுறை இப்படி வச்சு குடிச்சு பாருங்க. நீங்க இரும்பு மனிதர்களாக மாறி விடுவீர்கள்.

- Advertisement -

ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு மாவு வைத்து காய்கறிகளைச் சேர்த்து சுவையான சூப்பரான ஒரு சூப் எப்படி வைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த சூப்பில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த இந்த சூப்பை மிஸ் பண்ணாம வாரத்தில் ஒரு நாள் குடிங்க.

-விளம்பரம்-

சூப் அப்படி என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சூப் பல வெரைட்டிகள் இருக்கு சைவ சூப் இப்படி நிறைய இருந்தாலும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை சூப் தான். அப்படி அந்த சூப்பகளில நம்ம உடலுக்கு நன்மை தரக்கூடிய கூடிய ஒரு சூப் அப்படின்னா அது ராகி சூப் அப்படின்னு சொல்லலாம்.

- Advertisement -

இந்த ராகி மாவில் நம்ம ருசியான ஒரு சூப் வெச்சி குடிக்க போறோம். இந்த மழை காலத்துக்கு ஏத்த மாதிரி ஈவினிங் டைம்ல இப்படி ராகி மாவு வீட்ல இருக்குறப்போ சூப்பரா சூப் செய்து கொடுத்தீங்கன்னா ரொம்பவே ருசியாவும் சுவையாகவும் இருக்கும். இந்த ராகி உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறதுனால உணவுல வாரத்துக்கு ஒரு தடவையாவது ராகி சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. வாங்க இதை எப்படி செய்வது என்ட்ரி பார்ப்போம்.

Print
No ratings yet

ராகி சூப் | Ragi Soup Recipe In Tamil

ராகி மாவில் நம்ம ருசியான ஒரு சூப் வெச்சிகுடிக்க போறோம். இந்த மழை காலத்துக்கு ஏத்த மாதிரி ஈவினிங் டைம்ல இப்படி ராகி மாவுவீட்ல இருக்குறப்போ சூப்பரா சூப் செய்து கொடுத்தீங்கன்னா ரொம்பவே ருசியாவும் சுவையாகவும்இருக்கும். இந்த ராகி உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறதுனால உணவுல வாரத்துக்கு ஒரு தடவையாவதுராகி சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. வாங்க இதை எப்படி செய்வது என்ட்ரி பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Appetizer
Cuisine: tamil nadu
Keyword: Ragi Soup
Yield: 4
Calories: 261kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 அடி கனமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 100 டேபிள் ஸ்பூன் கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்,முட்டைகோஸ், மற்றும் குடைமிளகாய் தலா
  • 3 டேபிள் ஸ்பூன் கேழ்வரகு
  • 6 பல் பூண்டு
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • மிளகுத்தூள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைகோஸ்,மற்றும் குடைமிளகாய் இந்த காய்கறிகளை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு காய்கறிகளிலும் 3 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் போதும். நறுக்கிய காய்கறிகள் எல்லாம் அப்படியே இருக்கட்டும்.
  •  (தேவைப்பட்டால் மஷ்ரூம் மற்றும் பச்சை பட்டாணி இப்படி உங்களுக்கு விருப்பமான வேறு காய்கறிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.) அடுத்தபடியாக3 டேபிள் ஸ்பூன் அளவு கேழ்வரகு மாவை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
  • அடுத்தபடியாக தோல் உரித்த பூண்டு பல் – 6 மிகமிக பொடியாக நறுக்கியது, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 4 மிக மிக பொடியாக நறுக்கியது.இந்த இரண்டு பொருட்களையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது சூப்பர் சூப் தாளிக்க செல்லலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து விட்டு, அதில் 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும்,பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு முதலில் நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளவேண்டும்.
  • அடுத்து வெங்காயத்தை போட்டு வதக்கி, அடுத்தபடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, உடனடியாக1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி, சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்த காய்கறிகளை ஒரு மூடி போட்டு 5 லிருந்து 7 நிமிடங்கள் வேக வைத்துக் கொண்டால் போதும்.
  • இறுதியாக காய்கறிகள் வெந்தவுடன் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவை, இந்த சூப்பில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, மிதமான தீயில் கேழ்வரகு மாவு வேகும் வரை சூப்பை மீண்டும் கொதிக்க விட வேண்டும்.
  • சூப் அப்படியே கட்டியாக தொடங்கும். கேழ்வரகு மாவு நன்றாக வேக மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
  • இறுதியாக உங்களிடம் வெங்காயத்தாள் இருந்தால் இதன் மேலே தூவி சுட சுட பருகலாம்.இல்லை என்றால் கொத்தமல்லிதழை தூவி பருகலாம்.எதுவுமே இல்லை என்றால் கார்ன் சிபஸ் தூவியும் பருகலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 261kcal | Carbohydrates: 24g | Protein: 4g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Iron: 104mg