Advertisement
அசைவம்

எவ்வளவு செய்தாலும் காலியாகும் மட்டன் வாங்கி ஒரு முறை இப்படி கிரேவி செய்து பாருங்க!

Advertisement

இன்று நாம் மட்டனை வைத்து ஒரு அற்புதமான ரெசிபி தான் செய்து பார்க்க போகிறோம். ஆம், இன்று வீடே மணமணக்கும் வகையில் ராஜஸ்தானி மட்டன் ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் மட்டன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொழுது இது போன்று மாறுதலாக மட்டன் ரெசிபிகளையும் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் மட்டன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

சாப்பிட பரிமாறினால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கும் இந்த ராஜஸ்தானி மட்டன் ரெசிபி மிகவும் பிடித்து போய்விடும். அடுத்த முறை உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மட்டன் ரெசிபி இருக்கும். அதனால் இன்று இந்த ராஜஸ்தானி மட்டன் ரெசிபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ராஜஸ்தானி மட்டன் ரெசிபி | Rajasthani Mutton Recipe in Tamil

Print Recipe
எப்பொழுதும் போல் மட்டன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொழுது இது போன்று மாறுதலாக மட்டன் ரெசிபிகளையும் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட பரிமாறினால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கும் இந்த ராஜஸ்தானி மட்டன் ரெசிபி மிகவும் பிடித்து போய்விடும். அடுத்த முறை உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மட்டன் ரெசிபி இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian, rajasthan
Keyword mutton, மட்டன்
Prep Time 20 minutes
Cook Time 1 hour
Total Time 1 hour 20 minutes
Servings 4 people
Calories 826

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 மேசை கரண்டி எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 3 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 2 கரும்பு ஏலக்காய்
  • ஜாதிக்காய் சிறிது
  • ஜாதி பத்தரி சிறிது
  • 3 கிராம்பு
  • 5 பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
  • 2 வர மிளகாய்
  • 1 ½ மேசை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 KG மட்டன்
  • காஷ்மீரி வத்தல் பேஸ்ட் 25 வத்தலை ஊற வைத்து அரைத்தது
    Advertisement
  • 2 tbsp தனியா துாள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 tbsp நெய்
  • 1 கப் புளிக்காத தயிர்
  • 2 கப் தண்ணீர்
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் காஷ்மீரி வத்தலை எடுத்துக்கொண்டு அதனை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரங்கள் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு மணி நேரம் ஊறிய காஷ்மீரி வத்தலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து முதலில் கொரகொரவன அரைத்து. அதன் பின் வத்தல் ஊறவைத்த தண்ணீரில் சிறிது சேர்த்து
    Advertisement
    மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • பின் எண்ணய் நன்கு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கருப்பு ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதி பத்திரி மற்றும் கிராம்பு போன்ற பொருள்களை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு பின் நீள் வாக்கில் நிறுத்திய பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போன பின் இதனுடன் வர மிளகாய் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் மட்டனை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் மட்டன் ஓரளவு வெந்தவுடன் நாம் அரைத்த காஷ்மீரி மிளகாய் பேஸ்ட் சேர்த்து கிளறி விட்டு வதக்கவும். பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து விட்டு கிளறி விடுங்கள். பின் ஒரு இரண்டு நிமிடம் கழித்து புளிக்காத தயிர் சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கி கொள்ளவும்.
  • பின் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்துக் கொள்ளுங்கள். பின் தீயை குறைவாக வைத்து ஒரு மணி நேரங்கள் நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். பின் மட்டன் நன்கு வெந்து வந்தும் சிறிது, கொத்த மல்லி தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ராஜஸ்தானி மட்டன் கிரேவி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 1000gram | Calories: 826kcal | Carbohydrates: 6g | Protein: 32g | Fat: 10g | Saturated Fat: 4.6g | Cholesterol: 17mg | Sodium: 14mg | Potassium: 1326mg | Fiber: 10g | Sugar: 3g
Advertisement
Prem Kumar

Recent Posts

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

1 மணி நேரம் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

2 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் முலாம் பழம் இருந்தால் சூப்பரான முலாம் பழ ஐஸ்கிரீம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முலாம் பழத்தில் ஐஸ்கிரீமா அப்படினு ஷாக் ஆகாதீங்க. சாக்லேட் ஐஸ்கிரீம், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், மேங்கோ ஐஸ் கிரீம், சேமியா ஐஸ்…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிமையான ஒரு விஷயம்

இந்த உலகம் பணத்தால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம் பணம் மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே அசையாது…

5 மணி நேரங்கள் ago

உடலுக்கும் புத்துணர்ச்சி உண்டாக்க ருசியான பொன்னாங்கன்னி கீரை சூப் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

விதவிதமான சூப் வகைகளில் சத்து நிறைந்துள்ள இந்த பொன்னாங்கண்ணி ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் சிறந்த பொன்னாங்கண்ணி கீரை…

6 மணி நேரங்கள் ago