புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாதவங்க இந்த மாதிரி அசைவ சுவைல ஒரு ராஜ்மா கிரேவி செஞ்சு பாருங்க!

- Advertisement -

இந்த புரட்டாசி மாதத்தில் நிறைய பேரு சுத்தமா அசைவம் சாப்பிட மாட்டாங்க அவங்களுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும். அந்த மாதிரி அசைவம் சாப்பிடாம ரொம்ப கஷ்டப்படுறவங்க வீட்ல நெய் சோறு வெஜ் பிரியாணி பட்டாணி புலாவ் அப்படின்னு ஏதாவது ஒன்னு செஞ்சு அது கூட சைடு டிஷ்ஷா இல்ல ராஜ்மா கிரேவி செஞ்சு பாருங்க அசைவமே தோத்து போயிடும் அந்த அளவுக்கு சூப்பர் டேஸ்ட்ல இருக்கும் இந்த ராஜ்மா கிரேவி. இந்த ராஜ்மா கிரேவிய சப்பாத்தி பூரி இட்லி, தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம். ஒரு பெர்பெக்ட் ஆன காம்பினேஷனா இருக்கும் அது மட்டும் இல்லாம புலாவ் நெய் சோறுக்கு இது ஒரு சூப்பரான காமினேஷன்.

-விளம்பரம்-

அசைவ சுவைல நம் வாசனை நாலு வீட்டுக்கு தூக்கும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி தான் இந்த ராஜ்மா கிரேவி. இந்த ராஜ்மா கிரேவி சாப்பிடுவதற்கு சிக்கன் கிரேவி சாப்பிடற மாதிரியே இருக்கும் ஆனா சிக்கன் மட்டும் இருக்காது அவ்ளோதான் குழந்தைகளுக்கு சப்பாத்தி செஞ்சு அதுக்கு சைட் டிஷ்ஷா இந்த ராஜ்மா கிரேவியை கொடுத்த விடலாம். கண்டிப்பா மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. அது மட்டும் இல்லாம எப்பவுமே பூரி சப்பாத்திக்கு ஒரே மாதிரியா சைடு டிஷ் செஞ்சு ரொம்ப போர் அடிச்சு போச்சுன்னா அவங்களுக்கு கண்டிப்பா இந்த சூப்பர் டேஸ்டான ராஸ்மா கிரேவியை செஞ்சு கொடுங்க. சப்பாத்திக்கு சைடிஷா வச்சு கொடுத்தோம்னா எத்தனை சப்பாத்தி சாப்பிடுறோம் அப்படின்னு தெரியாது அத்தனை சாப்பிடுவோம் அவ்வளவு ருசியா இருக்கும்.

- Advertisement -

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்துட்டா கூட இந்த ராஜ்மா கிரேவியை செய்யலாம். இந்த ராஜ்மா கிரேவி அவ்ளோ ருசியாக இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்க கூடிய இந்த ராஜ்மா கிரேவிய இன்னைக்கே கூட உங்க வீட்ல செஞ்சு பாருங்க. மத்த பயிறு குழம்பு விட இந்த ராஜ்மா கிரேவி நிஜமாவே அசைவ சுவையில இருக்கும். அவ்ளோ டேஸ்டான இந்த ராஜ்மா கிரேவியை ஒரே ஒரு தடவ வீட்டுல செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சுவையான ராஜ்மா கிரேவிய எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

ராஜ்மா கிரேவி | Rajma Gravy Recipe In Tamil

இந்த புரட்டாசி மாதத்தில் நிறைய பேரு சுத்தமா அசைவம் சாப்பிட மாட்டாங்க அவங்களுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும். அந்த மாதிரி அசைவம் சாப்பிடாம ரொம்ப கஷ்டப்படுறவங்க வீட்ல நெய் சோறு வெஜ் பிரியாணி பட்டாணி புலாவ் அப்படின்னு ஏதாவது ஒன்னு செஞ்சு அது கூட சைடு டிஷ்ஷா இல்ல ராஜ்மா கிரேவி செஞ்சு பாருங்க அசைவமே தோத்து போயிடும் அந்த அளவுக்கு சூப்பர் டேஸ்ட்ல இருக்கும் இந்த ராஜ்மா கிரேவி. இந்த ராஜ்மா கிரேவிய சப்பாத்தி பூரி இட்லி, தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம். ஒரு பெர்பெக்ட் ஆன காம்பினேஷனா இருக்கும் அது மட்டும் இல்லாம புலாவ் நெய் சோறுக்கு இது ஒரு சூப்பரான காமினேஷன். அசைவ சுவைல நம் வாசனை நாலு வீட்டுக்கு தூக்கும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி தான் இந்த ராஜ்மா கிரேவி.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Rajma Gravy
Yield: 4 People
Calories: 131kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 100 கி ராஜ்மா
  • 3 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மட்டன் மசாலா
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை
  • 8 முந்திரி
  • 1 பட்டை, கிராம்பு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு குக்கரில் எட்டு மணி நேரம் ஊற வைத்த ராஜ்மாவை சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு விசில் விட்டு எடுக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் தக்காளி மிளகு சீரகம், சோம்பு, கசகசா பட்டை கிராம்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • ஆற வைத்த மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை வேக வைத்த ராஜ்மா உடன் சேர்த்து சிறிதளவு உப்பு மட்டன் மசாலா மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • மிக்ஸி ஜாரில் தேங்காய் முந்திரி பொட்டுக்கடலை சேர்த்து விழுதாக அரைத்து அதனையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • மசாலா வாசனை போன பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான அசைவ சுவையில் ராஜ்மா கிரேவி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 131kcal | Carbohydrates: 4.8g | Protein: 22g | Fat: 3.6g | Sodium: 64mg | Potassium: 45mg | Fiber: 6.1g | Vitamin C: 139mg | Calcium: 22mg | Iron: 13mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் காஷ்மீர் ராஜ்மா சப்ஜி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!