Advertisement
சைவம்

ரவை மாவில் பர்கர் ஸ்டைலில்  இட்லி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

தினமும் இட்லி, தோசை அப்படியே செய்து சாப்பிட்டு  பசங்களுக்கும் கொடுத்து போர் அடிச்சு போயிருக்கும் எல்லாரும் என்ன டெய்லி இட்லியும் தோசை தான் சாப்பாடு அப்படின்னு கேக்குற அளவுக்கு இருக்கிறவங்க இல்ல தோசை மாவும் இட்லி மாவும் இல்ல அப்படின்னு இருக்காங்க எல்லாம் இந்த டிபன் ட்ரை பண்ணி பாருங்க. ரொம்பவே சுவையா ரவையில பர்கர் ஸ்டைலில் மசாலா வைத்து எப்படி காலை உணவு செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம். இந்த டிஷ் ரொம்ப சுலபமா செய்திடலாம் இதுக்கு ரொம்ப டைம் கூட எடுக்காது.

எவ்வளவு ஈசியா செய்றமோ அந்த அளவுக்கு இதுல டேஸ்ட் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கும். ஒரே மாதிரி இட்லி, தோசை , சப்பாத்தி பொங்கல், பூரி அப்படின்னு சாப்பிட்டு இருக்க உங்களுக்கு போர் அடிக்குதா? ரவா இல்ல உப்புமா செய்து சாப்பிட பிடிக்காதவங்களை நீங்க அப்போ அந்த ரவா வச்சு ரவா இட்லி பர்கர் ஸ்டைல்ல ஸ்டஃப் இட்லி இப்படி செய்தே பாருங்க.

Advertisement

 உங்களுக்கும் சுவை ரொம்பவே பிடிக்கும் உங்க குழந்தைகளும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ரவா ஸ்டஃப்டு இட்லி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

ரவா பர்கர் இட்லி | Rava Burger Idly Recipe In Tamil

Print Recipe
ரொம்பவேசுவையா ரவையில பர்கர் ஸ்டைலில் மசாலா வைத்து எப்படி காலை உணவு செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம். இந்த டிஷ் ரொம்ப சுலபமா செய்திடலாம் இதுக்கு ரொம்ப டைம் கூட எடுக்காது. எவ்வளவு ஈசியா செய்றமோ அந்த அளவுக்கு இதுல டேஸ்ட் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கும். ஒரே மாதிரி இட்லி, தோசை , சப்பாத்தி பொங்கல், பூரி அப்படின்னு சாப்பிட்டு இருக்க உங்களுக்கு போர் அடிக்குதா? ரவா இல்ல உப்புமா செய்து சாப்பிட பிடிக்காதவங்களை நீங்க அப்போ
Advertisement
அந்த ரவா வச்சு ரவா இட்லி பர்கர் ஸ்டைல்ல ஸ்டஃப் இட்லி இப்படி செய்தே பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Rava Burger Idly
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 247

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் ரவை
  • 1 கப் தயிர்
  • உப்பு தேவையானஅளவு
  • 2 கேரட்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1/2 கப் பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கு, கேரட், பச்சை
    Advertisement
    பட்டாணி இவைகளை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து அதில் தயிர் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  • பின் வேக வைத்து எடுத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி இவைகளை ஒன்றாக சேர்த்து மசித்து கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்  சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி  கொத்தமல்லிதழைகளை தூவி இறக்கி வைக்கவும்.
     
  • பிறகு ஊற வைத்துள்ள ரவையில் நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கிளறிவிட்டு இட்லி பாத்திரத்தில் இட்லிகள் போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
  • இட்லிகள் வெந்த பிறகு அவைகளை தனியாக எடுத்து ஒரு இட்லிக்கு மேல் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் மேல் இன்னொரு இட்லியை வைக்கவும்.
  • பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் நாம் செய்து வைத்துள்ள ரவா பர்கர் இட்லிகளை கடாயில் வைத்து இரண்டு புறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
  • இட்லியின் இரண்டு புறமும் சிவந்து வந்த பிறகு சூடாக எடுத்து பரிமாறினால் ரவா பர்கர் இட்லி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 247kcal | Carbohydrates: 47g | Protein: 32g | Sodium: 32mg | Potassium: 366mg | Fiber: 10.1g | Calcium: 6mg | Iron: 5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

2 நிமிடங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

1 மணி நேரம் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

2 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

6 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

6 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

6 மணி நேரங்கள் ago