- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, மிளகாய் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை. மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் ரவா ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே.
ரவா ஊத்தப்பம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர டிபன். காலை நேரத்தை விட மாலை நேர டிபனாக இதை உண்பதற்கே பலரும் விரும்புவார்கள். தோசை வகையை சார்ந்த இவை தென்னிந்தியாவில் தான் உதயமானது. பொதுவாக இவை வெங்காயம், கேரட், மற்றும் குடை மிளகாயை கொண்டு செய்யப்படுகிறது. எனினும் அவரவர் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்தும் இதை செய்கிறார்கள். பெரும்பாலும் காய்கறி மற்றும் ரவையை கொண்டு செய்வதினால் இவை உடம்பிற்கும் சத்தானது.
ரவா ஊத்தாப்பத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் தோசையை போன்றே இதையும் மிக எளிதாக செய்து விடலாம். ஆனால் உண்பதற்கு தோசையை விட ரவா ஊத்தப்பம் இன்னும் நன்றாக இருக்கும். மேலும் அதிகம் சமைக்கத் தெரியாதவர்கள் கூட இதை மிக எளிதாக செய்து விடலாம். இவை செய்வதற்கும் மிகக் குறைந்த நேரமே எடுப்பதினால் சமைப்பார்கள் பொறுமை இழக்க மாட்டார்கள். இந்த ஊத்தாப்பத்தை வீட்லயே செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாவும் இருக்கும் அதே நேரம் பிடிச்ச மாதிரியான ஒரு உணவாகவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் இஞ்சி, கொத்தமல்லி, தக்காளி, குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் ரவை மற்றும் தயிரை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற விடவும்.
பின் மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை மொந்தமாக ஊற்றி அதன்மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்தமல்லி தூவி அதன் மேல் நெய் ஊற்றி தோசையை திருப்பி போட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரவா ஊத்தப்பம் தயார். இதனை கார சட்னியுடன் பரிமாறலாம் மிகவும் ருசியாக இருக்கும்.






