- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
வீட்ல என்னதான் சமைக்கும் போது பொரியல் கூட்டு அப்படின்னு செஞ்சாலும் அப்பளம் வடகம் வத்தல் இதெல்லாம் வைத்து சாப்பிடும்போது இன்னும் டேஸ்டா இருக்கும். ஒரு சிலர் என்னதா காய்கறிகள் இருந்தாலும் இந்த அப்பளம் வடகம் எல்லாத்தையும் விரும்புவாங்க. அந்த மாதிரி விரும்பி சாப்பிடுறவங்களுக்கு கடையில வாங்கி கொடுக்காம வீட்டிலேயே சூப்பரா அப்பளம் வடகம் எல்லாமே செஞ்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம். தேவைப்படுகிற போது போட்டு பொரிச்சு எடுத்துக்கலாம் அதே மாதிரி இந்த ரவை வச்சு செய்யக்கூடிய ரவை வத்தல ஒரு மாசம் வரைக்கும் நீங்க ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம்.
இதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. குறைவான பொருட்கள் வச்சு கண்டிப்பா நிறைய வத்தல் செய்யலாம். டேஸ்ட்டும் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு இந்த வத்தல் ரெசிபி சூப்பரா இருக்கும். இப்போ வெயில் காலம் ஆரம்பிச்சிடுச்சு அதனால இப்பவே உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு செஞ்சு ஒரு வருஷத்துக்கு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க.
அடிக்கிற வெயிலுக்கு ஒரே நாளில் வத்தல் ரெடி ஆகிடும். ரொம்ப ரொம்ப டேஸ்டாவும் இருக்கும். நிறைய பொருட்கள் வச்சு வத்தல் செய்வாங்க அதுல இந்த ரவை வத்தலும் ஒன்னு. நல்லா காயவச்சு ஒரு டைட்டான பாக்ஸ்ல போட்டு ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம். வீட்ல காய்கறிகள் இல்லாத சமயத்தில் கூட சிம்பிளா ஏதாவது பருப்பு கடையல் வச்சு அதுக்கு சைட் டிஷ்ஷா இந்த வத்தல் பொரிச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ரவை வச்சு செய்யக்கூடிய ரவை வத்தல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு ஸ்டைல் ருசியான மாங்காய் வத்தல் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
Ingredients
Method
முதலில் மிக்ஸி ஜாரில் ரவையை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஏழு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரைத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
15 நிமிடம் நன்றாக கிளறி ரவை வெந்ததும் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
அதில் உப்பு சில்லி ஃப்ளேக்ஸ் சீரகம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து அரை சூடாக இருக்கும் போதே காட்டன் துணியில் வடகம் போல் ஊற்றி இரண்டு நாட்களுக்கு காய வைத்து எடுக்கவும்.
சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ரவை வத்தல் தயார்.






