Advertisement
காலை உணவு

காலை உணவுக்கு ருசியான மாங்காய் அடை தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!!

Advertisement

நம்மில் பலரும் தினசரி அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை. வீட்டில் எந்த உணவு வைக்க நேரம் இல்லை என்றால் உடனே கடைக்கு சென்று தோசை மாவு வாங்கி வந்து தோசை சுடுவது பலருக்கு வழக்கமான ஒன்று. அப்படி எப்போதும் அரிசி மாவு தோசையை மட்டும் சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு ஒரு புது விதமான அடை தோசை செய்து கொடுத்தால் ரொம்ப பிடித்தமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு ஏற்ற ருசியான முட்டை அடை இப்படி செய்து பாருங்க!

Advertisement

Advertisement

தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று அடை. எனவே, அடை தோசை ஒரு கிண்ணம் சாம்பார் மற்றும் சட்னியுடன் இணைக்கப்படும் போது, ​​ஆரோக்கியமான மற்றும் நிறைவான காலை உணவுக்கு சரியான தேர்வாகும். தினமும் தோசை, கோதுமை தோசை போன்றவற்றையே தொடர்ந்து செய்து கொடுப்போம். இதனால் சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். எனவே கொஞ்சம் மாறுதலுக்கு இந்த மாங்காய் அடை தோசையை செய்து பாருங்கள்..!

மாங்காய் அடை தோசை | Raw Mango Adai Dosa

Print Recipe
நம்மில் பலரும் தினசரி அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை. வீட்டில் எந்த உணவு வைக்க நேரம் இல்லை என்றால் உடனே கடைக்கு சென்று தோசை மாவு வாங்கி வந்து தோசை சுடுவது பலருக்கு வழக்கமான ஒன்று. அப்படி எப்போதும் அரிசி மாவு தோசையை மட்டும் சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு ஒரு புது விதமான அடை தோசை செய்து கொடுத்தால் ரொம்ப பிடித்தமாக இருக்கும். தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று அடை. எனவே, அடை தோசை ஒரு கிண்ணம் சாம்பார் மற்றும் சட்னியுடன் இணைக்கப்படும் போது, ​​ஆரோக்கியமான மற்றும் நிறைவான காலை உணவுக்கு சரியான தேர்வாகும்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword adai dosai
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 99

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 தோசை கரண்டி
  • 1 தோசை கல்

Ingredients

  • 1 மாங்காய்
  • 1 கப் அரிசி மாவு
  • 1 கப் கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் ரவை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

தாளிக்க

  • 1 நறுக்கிய
  • 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • உப்பு                              தேவையானஅளவு
  • எண்ணெய் தேவையானஅளவு

Instructions

  • முதலில் அதிகம் புளிப்பு இல்லாத பச்சை மாங்காயை தோல் சீவி நீளமா வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்திருக்கும் கடலை மாவு, அரிசிமாவு, பச்சை மாங்காய், மிளகாய் தூள், பெருங்காய தூள், தேவையான உப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • மாங்காய் எல்லாம் நன்றாக மசிந்து மாவு கட்டி கட்டாமல் தேவையான தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கவும்.
  • பின்னர் அரைத்த மாவுடன் ரவை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், இஞ்சி சேர்த்து வறுக்கவும்.
  • அத்துடன் பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த மாவில் கலக்கவும். கடைசியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும்.
  • அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசை வார்ப்பது போல் மெல்லிசா சுட்டு இரண்டு பக்கவும் திருப்பி போட்டு சுத்தி எண்ணெய் ஊற்றி முறுகலானதும் எடுத்து விடவும்.
  • மிக சுவையான 10 நிமிடத்தில் செய்ய கூடிய வித்தியாசமான சுவையில் மொறு மொறு மாங்காய் காரசாரமான அடை தோசை தயார்.
  • வெல்லம் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்

Nutrition

Serving: 500g | Calories: 99kcal | Carbohydrates: 25g | Protein: 1.4g | Fat: 0.6g | Potassium: 277mg | Fiber: 2.6g | Vitamin A: 765IU | Vitamin C: 60.1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

30 நிமிடங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

2 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

6 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

16 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

17 மணி நேரங்கள் ago