சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர். தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் இந்த குருமா வெவ்வேறு இடங்களில் வித விதமாக சமைத்து உண்கின்றன.
இதனையும் படியுங்கள் : இப்படிக்கூட செய்யலாமா என்று அசந்து போகும் அளவிற்கு ருசியான மீன் குருமா இப்படி செய்து பாருங்க!!
குருமாக்களில் பல வகை உண்டு. அதில் பிரசித்தி வாய்ந்தது மட்டன் குருமா, சிக்கன் குருமா, வெஜிடபிள் குருமா, உருளைக்கிழங்கு குருமா, மற்றும் காலிஃபிளவர் பட்டாணி குருமா ஆகும். அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் குருமா எவ்வாறோ, சைவப் பிரியர்களுக்கு வெஜிடபிள் மற்றும் காலிபிளவர் பட்டாணி குருமா. இவை செய்வது மிகவும் சுலபம். இப்பொழுது சுவையான பப்பாளி காய் குருமா செய்வதற்கு எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.
பப்பாளிக்காய் குருமா | Raw Papaya Kurma Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 துண்டு பப்பாளிக்காய்
- 1 பெரிய
- 2 தக்காளி
- 1/4 கப் தேங்காய்
- 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 துண்டு பட்டை
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 பிரிஞ்சி
- 2 ஏலக்காய்
- 2 கிராம்பு
- 4 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை
- ஒரு சிறிய கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை இவைகளை லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, வதக்கிய மசாலா பொருட்கள் இவற்றை சேர்த்து நைஸாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு சிறிய பாத்திரத்தில் சிறியதாக நறுக்கிய பப்பாளி காய்களை தண்ணீர்விட்டு வேக வைக்கவும்.
- இன்னொரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி இவைகளை லேசாக வதக்கி அரைத்து வைத்த விழுதை சேர்த்து பிறகு அந்த பப்பாளி காய்களுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- இப்பொழுது பப்பாளிக்காய் குருமா ரெடி. இதை சப்பாத்தி பூரி இவைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.