கணவன் மனைவி உறவு என்பது ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இணைந்தே வாழும் புனிதமான ஒரு உறவு. இன்றைய காலத்தில் சமத்துவம் என்ற பெயரில் கணவனுக்கும் மனைவிக்கும் அதிக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு திருமணமான சிறிது நாட்களிலேயே விவாகரத்து வாங்கி பிரியும் நிலை ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. அப்படி விரைவிலேயே பிரிந்து செல்லும் தம்பதிகள் சண்டை போடக்கூடிய தம்பதிகள் யாராக இருந்தாலும் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக ஒற்றுமையோடு சேர்ந்து வாழலாம். அதற்கு செய்யக்கூடிய அரச இலை பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

கணவன் மனைவி சண்டை
கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே அவர்களுக்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்காது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய கூடிய தம்பதிகளாக இருந்தாலும் சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்து புரிந்து கொண்டாலே விவாகரத்து என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. மனைவியும் கணவரும் ஒன்றாக சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை சண்டைகள் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
அரச இலை பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு அரச இலை தேவைப்படும். இந்த பரிகாரத்திற்கு தேவைப்படும் அரச இலைகளை வியாழக்கிழமை அன்றுதான் மரத்திலிருந்து பறிக்க வேண்டும். தேய்பிறை நவமி கரிநாள் தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் பூஜை செய்ய வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை போட்டு அதில் பன்னீரை ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த சந்தன விழுதை ஒரு குச்சியில் எடுத்து பறித்த அரச இலைகளை கழுவி எடுத்து அதில் கடவுளின் பெயரை முதலில் எழுத வேண்டும் பிறகு மனைவியின் பெயரையும் எழுத வேண்டும். ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் வெள்ளை சர்க்கரை அல்லது பச்சரிசியை நிரப்பி அதன் மேல் நாம் எழுதி வைத்துள்ள இலையை வைக்க வேண்டும் அதனுடைய நுனிப்பகுதி வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு விநாயகரை வழிபட்டு விட்டு அடுத்ததாக குலதெய்வம் இஷ்ட தெய்வம் போன்ற அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த வாரம் முழுவதும் அதனை அப்படியே வைத்து விட்டு அடுத்த வாரம் வியாழக்கிழமை புதிய இலைகளை பறித்து அதேபோல் செய்து விட்டு பழைய இலைகளை எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் மூட்டையாக கட்டி உங்களுடைய திருமண ஆடைகள் வைத்திருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 7 வாருங்கள் செய்து வந்தால் நிச்சயமாக கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சனையும் வராது. முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது தீர்ந்துவிடும்.
இதனையும் படியுங்கள் : சுக்கிர பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!!