பொதுவாக நாம் அனைவருக்குமே பால் சார்ந்த உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி பால் உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது பன்னீர் தான். பன்னீர் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த பன்னீர் கிரேவி இடம் பெற்றிருக்கும். அப்படி பன்னீர் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த பன்னீரை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
எந்த ஒரு சாப்பாட்டிற்கும் பன்னீர் வச்சு சாப்பிடும் பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அப்படி இந்த ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யும் பன்னீர் கிரேவி எல்லாருக்கும் பிடிக்கும். நிறைய பன்னீர் ரெசிபிகள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் பன்னீர் இருந்தாலும், மசாலாக்கள் இருந்தாலும் இந்த ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் கிரேவி ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சுவையான இந்த ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் கிரேவி நீங்க செஞ்சு கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, பரோட்டா, நாண், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். இப்போது இந்த பன்னீர் வகைகளில் ஒன்றான ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
ரெஸ்டாரன்ட் பன்னீர் கிரேவி | Restaurant Paneer Gravy Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 வாணலி
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 250 கி பன்னீர்
- 2 பெரிய வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 2 துண்டு இஞ்சி
- 2 காஷ்மீர் மிளகாய்
- 1 பச்சை மிளகாய்
- 2 தக்காளி
- 10 முந்திரி பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 குடைமிளகாய்
- 1 மஞ்சள் தூள் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 1/2 டீஸ்பூன் சர்க்கரை
- கஸ்தூரி மேத்தி சிறிதளவு
- 4 டேபிள் ஸ்பூன் பிரெஷ் க்ரீம்
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் பன்னீரை சதுர துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி, சீரகம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், வர மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஆறவிடவும். பின் இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்கவிடவும்.
- பின் இதில் சர்க்கரை, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து பன்னீரை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
- பின் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கஸ்தூரி மேத்தி, பிரஷ் கிரீம் சேர்த்து கடாயை மூடி ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க பன்னீர் புதினா புலாவ் இப்படி செய்து பாருங்கள் பிரியாணியின் சுவை கூட தோற்றுப்போய் விடும்!!!