- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது.
வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் புதினா புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. புதினா நறுமனத்திற்கு மட்டும் சேர்த்து கொள்ளமால் அதை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக கோடையில் வெப்பநிலை உயராமல் உங்கள் உடலைப் பாதுகாக்க இது பயன் உள்ளதாக இருக்கும். புதினாவில் மிக எளிதாக செரிமானமாகி, பசியை தூண்டும். புதினாவில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது.
உங்கள் சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், சருமத்தை நீரேற்றம் செய்யவும், வயதான அறிகுறிகளை வரவிடாமால் தடுக்கும். புதினா சாப்பிடுவது உங்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக செய்து விடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான தக்காளி புலாவ் இப்படி ஒரு தரம் மட்டும் செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிப்பார்கள்!
Ingredients
Method
முதலில் புதினா மற்றும் மல்லி இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் பன்னீரை துண்டுகளாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு, லவங்கம், அன்னாசி பூ, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
பின் தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது, காஷ்மீர் மிளகாய்த்தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பின் அரிசியை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அதனுடன் நாம் பொரித்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பன்னீர் புதினா புலாவ் தயார். இதற்கு உருளைக்கிழங்கு வறுவல் அல்லது தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.






