நினைத்தது நடக்க வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்க வேண்டிய நேரம்!

- Advertisement -

குறிப்பாக வீட்டில் சுப காரியங்கள் நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பலன்கள் அதிகம். மேலும் மகாலட்சுமி தேவியாரின் அன்னபூரணி தேவியாரின் அம்சம் நிறைந்த கல் உப்பையும் அரிசியையும் வைத்து வழிபாடு செய்யும்போதும் வெள்ளிக்கிழமை என்று இந்த பொருட்களை வீட்டிற்கு வாங்கும் போதும் நம்முடைய பரிகாரங்களுக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும். வீட்டில் இந்த இரண்டு பொருட்களையும் வாங்குவதன் மூலம் தெய்வீக சக்தி நிறைந்திருக்கும் லக்ஷ்மி கடாட்சமும் நிறைந்திருக்கும்.

-விளம்பரம்-

உப்பின் மகிமை

மகாலட்சுமி தேவியார் வாசம் செய்யக்கூடிய பொருட்களில் கல் உப்பு ஒன்று. மகாலட்சுமி தேவியார் கல்லுப்பில் நிறைந்திருப்பதால் இது வீட்டில் இருக்கும்போது அவருடைய அருள் முழுவதுமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்ந்து போவதற்காக உப்பை வைத்து பரிகாரம் செய்யலாம். உப்பிற்கு தீய சக்திகளை விரட்டி நல்ல சக்திகளை ஈர்க்கக்கூடிய சக்தி உள்ளது. எனவே உப்பினை எப்படி பயன்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையில் நன்மைகளை பெற முடியும் என்பதை பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

பிரச்சினைகளும் அதனை தீர்க்கும் உப்பும்

வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்கி வருவது மங்களகரமான ஒரு விஷயம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில விதிமுறைகளை பின்பற்றி உப்பு வாங்குவதால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகள் தீர்ந்து போகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் உள்ளது அதற்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உப்பு வாங்குவதால் அந்த பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.

வேலை கிடைக்க உப்பு வாங்க வேண்டிய நேரம்

வேலை கிடைக்காமல் நீண்ட நாட்களாக சிரமப்படுபவர்கள் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வெள்ளிக்கிழமை என்று காலை 6 மணி முதல் 7:00 மணிக்குள் யாருக்கு வேலை கிடைக்க வேண்டுமோ அவர்களுடைய கையால் உப்பு வாங்கி வந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து அதற்கு பூ போட்டு ஓம் நமோ மஹாலட்சுமியே நமஹ என்று மந்திரத்தை 18 முறை கூறி பன்னீர் ரோஜாக்களை உப்பின் மீது போட்டு பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து ஐந்து வாருங்கள் இதனை செய்ய வேண்டும்.

செல்வம் சேர உப்பு வாங்க வேண்டிய நேரம்

வீட்டில் செல்வம் சேரவில்லை என்ற பிரச்சனை இருப்பவர்கள் வீட்டின் உடைய தலைவர் கையால் வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் உப்பு வாங்கி வந்து விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருடைய காலடியில் வைத்து விநாயகரை ஐந்து முறை வலம் வர வேண்டும். ஓம் நமோ விநாயகாய நமக என்று மந்திரத்தை ஐந்து முறை சொல்லிக் கொண்டே வலம் வர வேண்டும். பிறகு அந்த உப்பினை வீட்டிற்கு கொண்டு போய் சமையலறையில் வைத்து பயன்படுத்தலாம்.

-விளம்பரம்-

நோய்கள் தீர உப்பு வாங்க வேண்டிய நேரம்

வீட்டில் யாருக்காவது ஏதாவது நோய் இருந்தால் மருத்துவ செலவு அதிகரிக்கும் எனவே வீட்டில் குடும்ப தலைவி வெள்ளிக்கிழமை என்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் உப்பு வாங்கி அதனை பெருமாள் கோவிலுக்கு எடுத்து சென்று பெருமாளுடைய காலடியில் வைத்து ஓம் நமோ நாராயணாய நமஹ என்று ஒன்பது முறை உச்சரிக்க வேண்டும். பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து முடித்த பின் சமையலறையில் வைக்கலாம். மூன்று வாரங்கள் தொடர்ந்து இதனை செய்து வர வேண்டும்.

இதனையும் படியுங்கள் : வெள்ளிக்கிழமை அன்று வாங்க வேண்டிய மங்களகரமான சில பொருட்கள்