- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
நாம் என்னதான் வீடுகளில் சுவையாக வெண்பொங்கல் செய்து வைத்தாலும் அதைவிட காலையில் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் வெண்பொங்கலையே நமது வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்புவார்கள். நம்ம வீட்டில் மட்டும் இல்லை பலர் வீடுகளிலும் இதான் நடக்கிறது. அதனால் இன்று ரோட்டு கடைகளில் வைப்பது போன்ற வெண்பொங்கல் எப்படி வைப்பது என்று தான் பார்க்க போகிறோம்.
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் திணை சக்கரை பொங்கல் இப்படி செஞ்சி பாருங்க!
இப்படி ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அடுத்த முறையும் இதுபோல வைக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு இந்த வெண்பொங்கல் அட்டகாசமான சுகையில் இருக்கும். அதனால் இன்று இந்த ரோட்டு கடை வெண்பொங்கல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
வெண்பொங்கல் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும். வறுத்த பின்பு இதனை நீரில் கழுவி கொள்ள வேண்டும்.
பின் ஒரு குக்கரில் நெய் சேர்த்து சூடாக்கவும். பின் அதில் கால் டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள், 1 துண்டு இஞ்சி பொடிதாக நறுக்கியது, கீறிய மூன்று பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
பின் அதில் வறுத்து வைத்திருக்கும் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும்.
அதன் பிறகு அதில் ஐந்து கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
நான்கு விசில் வந்தவுடன் பிரஷர் போன பிறகு குக்கரை திறக்கவும், இப்பொழுது பருப்பு மற்றும் சாதம் நன்றாக வெந்திருக்கும்.
நெய், முந்திரி, மிளகு, சீரகம்,கருவேப்பிலை மற்றும் வெண்பொங்கலை தாளிக்க வேண்டும், அதற்கு ஒரு கடாயில் நெய் சேர்த்து உருக்கி கொள்ளவும்.
நெய் உருகிய பிறகு சிறிதளவு முந்திரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.
முந்திரி பொன்னிறம் ஆன பிறகு மிளகு, சீரகம், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
இந்த தாளிப்பை வெண் பொங்கலில் சேர்த்து கிளறி கொள்ளவும், பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிண்டவும்.






