Advertisement
ஆன்மிகம்

ருசியான சாமை அரிசி பிரியாணி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Advertisement

பிரியாணி, புலாவ், வெஜ் ப்ரைட் ரைஸ் இப்படியான வகைகளில் சுவை, நிறம் இதற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக இருப்பதுதான். பாஸ்மதி அரிசி பதில் சாமை அரிசியில் பிரியாணி சமைத்து பாருங்கள் . பிரியாணி எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக சாமை அரிசியில் வைத்து ஒரு அருமையான

இதையும் படியுங்கள் : மட்டன் பிரியாணி குக்கரில் குழையாமல் வர இப்படி செய்யுங்க!

Advertisement

பிரியாணியை எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இப்படி செய்யும் போது பாஸ்மதி அரிசி பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, விரும்பி சாப்பிடுவார்கள். அத்துடன் இதில் காய்கறிகள் அனைத்தும் சேர்த்துக் கொடுப்பதால் ஒரு நல்ல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.

சாமை அரிசி பிரியாணி | Samaiarisi Biriyani Recipe in Tamil

Print Recipe
பிரியாணி, புலாவ், வெஜ் ப்ரைட் ரைஸ் இப்படியான வகைகளில் சுவை, நிறம் இதற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக இருப்பதுதான். பாஸ்மதி அரிசி பதில் சாமை அரிசியில் பிரியாணி சமைத்து பாருங்கள் . பிரியாணி எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக சாமை அரிசியில் வைத்து ஒரு அருமையான பிரியாணியை எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இப்படி செய்யும் போது பாஸ்மதி அரிசி பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, விரும்பி சாப்பிடுவார்கள். அத்துடன் இதில் காய்கறிகள் அனைத்தும் சேர்த்துக் கொடுப்பதால் ஒரு நல்ல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.
Course dinner, LUNCH
Advertisement
Cuisine Indian, TAMIL
Keyword Biriyani, பிரியாணி
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 412

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் சாமை அரிசி
  • 4 பல் பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 பட்டை
  • 2 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 3 லவங்கம்
  • 2 கப் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலந்தது
  • 1/4 கப் பட்டாணி
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1/4 Tsp மிளகாய் தூள்
  • 1/2 Tsp மஞ்சள் தூள்
  • 1 Tbsp எண்ணெய்
  • 1 Tbsp நெய்
  • 1 கைப்பிடி புதினா, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  • 5 முந்திரி
  •   உப்பு தேவையான அளவு
  • 3 கப் தண்ணீர்
  • தயிர் சிறிதளவு
  • எலுமிச்சை சாறு பாதி பழம்

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் வெங்காயம்,
    Advertisement
    தக்காளி, புதினா, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் சாமை அரிசியைக் கழுவி ஊறவைக்கவும்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கியதும் அதில் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச் சேர்த்துக் கிளறவும்.
  • அதன் பின் தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்த்து மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் அதிலன மூன்று கப் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • பின் நன்கு கொதி வந்தவுடன் நாம் ஊறவைத்த சாமை அரிசியைச் சேர்த்து, மிதமான சூட்டில் வேகவைக்கவும். அதன் பின் அரிசி முக்கால் பாகம் வெந்து வந்தவுடன்.
  • நாம் நறுக்கிய வைத்துள்ள புதினா, கொத்தமல்லி சேர்த்து, நெய் விட்டு, முந்திரியைத் தூவி ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். கடைசியாக எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, நன்றாகக் கிளறிப் பரிமாறவும். அவ்வளவு தான் சாமை அரிசி பிரியாணி தயார்.

Nutrition

Serving: 1200G | Calories: 412kcal | Carbohydrates: 78g | Protein: 21g | Fat: 1.2g | Cholesterol: 4mg | Potassium: 66mg | Fiber: 2g | Sugar: 0.5g | Vitamin A: 13IU | Iron: 0.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

1 மணி நேரம் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

1 மணி நேரம் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

4 மணி நேரங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

6 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

7 மணி நேரங்கள் ago