- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பிரியாணி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியா செய்வாங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரியாணியும் ரொம்ப பிடிக்கும். மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி அப்படின்னு பல பிரியாணி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை மட்டன் தம் பிரியாணி ஒரு தடவ செஞ்சு பாருங்க. இந்த மட்டன் தம் பிரியாணி கண்டிப்பா சாப்பிடறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். ஒரு தடவை இந்த மட்டன் தம் பிரியாணி செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இந்த பிரியாணியை வீட்ல ட்ரை பண்ணுவீங்க. இந்த பிரியாணியில் நம்ம தேங்காய் பால் ஊத்தி செய்ய போறதால ரொம்ப டேஸ்டா இருக்கும்.
இந்த பிரியாணிக்கு தண்ணீரை சேர்க்க தேவையில்லை. தேங்காய் பால் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து இந்த பிரியாணியை சூப்பரா செய்யலாம். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த பிரியாணியும் செஞ்சு பாருங்க கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. ரெஸ்டாரண்ட்ல கூட உங்களுக்கு இந்த மாதிரி ஒரு பிரியாணி கிடைத்திருக்கவே கிடைச்சிருக்காது அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம ஒரு தடவை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
இதுக்கு சைடிஸ் கூட தேவைப்படாது அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். தயிர் பச்சடி மட்டுமே வைத்து சாப்பிடலாம் இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. எவ்வளவு செஞ்சாலும் பத்தாது. வீட்ல ஏதாவது விசேஷங்கள் வரும்போது கடையில வாங்கவே தேவையில்லை இந்த மாதிரி வீட்டிலேயே செஞ்சுட்டா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான மட்டன் தம் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
Ingredients
Method
ஒரு குக்கரில் மட்டன் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு சோம்பு பிரியாணி இலை நட்சத்திர சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்த விழுது தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் பிரியாணி மசாலா தனியாத்தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் மட்டன் மட்டும் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு தயிர் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கப் தேங்காய் பால் ஒரு கப் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அரிசியை ஊற வைக்காமல் அப்படியே கழுவி சேர்த்து எலுமிச்சை சாறு,உப்பு அனைத்தும் சரிபார்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
15 நிமிடம் நன்றாக வெந்ததும் தோசை சட்டியின் மேல் பிரியாணி செய்த பாத்திரத்தை வைத்து தம் போட்டு 15 நிமிடத்திற்கு பிறகு திறந்தால் சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.






