- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கிழங்கில் சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு என்று வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிழங்கும் ஒரு தனித்துவமான சுவையை தரும். அந்த வகையில் இன்று நாம், சேனைக்கிழங்கினை வைத்து ஒரு ரெசிபியை காண உள்ளோம். உங்கள் வீட்டில் உள்ளோர் சேனைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான தொக்கு செய்யுங்கள். இது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு சூப்பராக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு சாம்பார் வைத்தால் அருமையான இந்த சேனைக்கிழங்கு தொக்கு செய்தால் மட்டும் போதும். இதை செய்து விட்டால் எல்லா வகையான குழம்புக்கும் ஏற்ற உணவாக இருக்கும். இதில் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கு வலுவை சேர்க்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
சேனையை நாம் அதிகமாக சாப்பிடுவதில்லை ஆனால் இதில் இருக்கும் ஈஸ்டோஜன் பெண்களுக்கு மிகவும் நல்லது அதனால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த சேனைக்கிழங்கு வறுவலில் பலவகையான மசாலாக்கள் சேர்த்து செய்வதால், இதன் சுவையோ கறி சுவைக்கு நிகராக இருக்கும். கறி செய்து சாப்பிட முடியாத நாட்களில் இந்த மாதிரி செய்து பாருங்கள். கறியே வேண்டாம், இதனையே செய்து கொடுத்தால் போதும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லுவார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இப்போது சுவையான சேனைக்கிழங்கு தொக்கு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அசைவ சுவையில் சேனைக்கிழங்கு சாப்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பின் வேகவைத்த சேனைக்கிழங்குடன் குழம்பு மிளகாய்த்தூள், உப்பு, புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் பொரித்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கி மிளகு தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சேனைக்கிழங்கு தொக்கு தயார்.






