Advertisement
சைவம்

மதிய உணவுக்கு சுட சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான சேப்பங்கிழங்கு மசியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

Advertisement

இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. சேப்பங்கிழங்கு நம்முடைய ஊர்களில் குட்டிக்குட்டியாகக் கிடைக்கும். இவை பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளன. இவற்றை சமைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் நன்றாக சிவந்து வரும். அவ்வளவாக கொழகொழப்பு தெரியாது. நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் செய்யும்போது வாசனைக் கொஞ்சம் கூடுதலாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும். இதே போல் இவற்றுடன் பூண்டைத் தட்டிப் போடுவது நல்ல வாசனை மற்றும் சுவையைக் கொடுக்கும்.

கிழங்கு வகைகளில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி நார்ச்சத்துக்களும் அதிகம் இருக்கும் என்பதால், அவ்வப்போது கிழங்கு வகைகளை சமைத்து சாப்பிடுவது நல்லது. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. ஆனால் அந்த உருளைக்கிழங்கு போலவே சேப்பங்கிழங்கும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதுவும் அந்த சேப்பங்கிழங்கை மசியல் செய்து, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பபி சாப்பிடுமாறும் இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.

Advertisement

சேப்பங்கிழங்கு மசியல் | Seppankizhangu Masiyal Recipe In Tamil

Print Recipe
இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. சேப்பங்கிழங்கு நம்முடைய ஊர்களில் குட்டிக்குட்டியாகக் கிடைக்கும். இவை பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளன. இவற்றை சமைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் நன்றாக சிவந்து வரும். அவ்வளவாக கொழகொழப்பு தெரியாது. நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் செய்யும்போது வாசனைக் கொஞ்சம் கூடுதலாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.
Advertisement
உருளைக்கிழங்கு போலவே சேப்பங்கிழங்கும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதுவும் அந்த சேப்பங்கிழங்கை மசியல் செய்து, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Seppankizhangu Masiyal
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 164

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கி சேப்பங்கிழங்கு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன்
    Advertisement
    அரிசி மாவு
  • உப்பு தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் சேப்பங்கிழங்கு நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • பின் இவை ஆறினதும் அதன் தோலை நீக்கி விட்டு கையால் மசித்துக் கொள்ளவும். மசித்த சேப்பங்கிழங்கில் அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வறுக்கவும். அதன்பிறகு சேப்பங்கிழங்கை சேர்த்து எண்ணெயிலேயே வெந்து மசிந்ததும், அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் வித்தியாசமான, சுவையான சேப்பங்கிழங்கு மசியல் தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 164kcal | Carbohydrates: 3.7g | Protein: 4.6g | Fat: 2.2g | Sodium: 4mg | Potassium: 620mg | Fiber: 4g | Vitamin A: 8IU | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 7.1mg

இதனையும் படியுங்கள் : சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு எப்படி ருசியா செய்வதுன்னு  தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

19 மணி நேரங்கள் ago