செப்டம்பர் மாதம் என்பது கிரிகேரியன் காலண்டரில் ஒன்பதாவது மாதமாகவும் ரோமானிய காலண்டரில் ஏழாவது மாதமாகவும் வரும். லத்தீன் மொழியில் செப்டம் என்றால் ஏழு என்பது பொருள். ஞானத்திற்கான மாதமாக இந்த செப்டம்பர் மாதம் கருதப்படுகிறது பக்திக்கும் மரியாதைக்கும் உரிய மாதம் ஆனது இந்த மாதம் இந்த மாதத்தில் ஞானத்திற்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கு உரிய தினமும் ஞான முதல்வனான விநாயகப் பெருமானுக்கு உரிய தினமாகவும் பல சிறப்புகள் இந்த மாதத்தில் உள்ளது மேலும் என்னென்ன சிறப்புகள் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
2024 செப்டம்பர் முக்கிய விரத நாட்கள்
சிவராத்திரி-செப்டம்பர் 1 (ஆவணி 16)- ஞாயிற்றுக்கிழமை மற்றும் செப்டம்பர் 30 (புரட்டாசி 14)- திங்கட்கிழமை
அமாவாசை- செப்டம்பர் 2 (ஆவணி 17)- திங்கட்கிழமை
சதுர்த்தி செப்டம்பர் 7 (ஆவணி 22)- சனிக்கிழமை
சஷ்டி -செப்டம்பர் 9 (ஆவணி 24)- திங்கட்கிழமை மற்றும் செப்டம்பர் 23(புரட்டாசி 7)- திங்கட்கிழமை
திருவோணம்-செப்டம்பர் 14 (ஆவணி 29)- சனிக்கிழமை
ஏகாதசி-செப்டம்பர் 14 (ஆவணி 29)- சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 28(புரட்டாசி 12)- சனிக்கிழமை
பிரதோஷம்-செப்டம்பர் 15 (ஆவணி 30) ஞாயிற்றுக்கிழமை மற்றும் செப்டம்பர் 30 (புரட்டாசி 14)- திங்கட்கிழமை
பௌர்ணமி-செப்டம்பர் 17(புரட்டாசி 1)- செவ்வாய்க்கிழமை
சங்கடஹர சதுர்த்தி-செப்டம்பர் 21 (புரட்டாசி 5 )-சனிக்கிழமை
கிருத்திகை-செப்டம்பர் 22 (புரட்டாசி 6)- ஞாயிற்றுக்கிழமை
2024 செப்டம்பர் சுப முகூர்த்த நாட்கள்
செப்டம்பர் 5 (ஆவணி 20)- வியாழக்கிழமை- வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 6 (ஆவணி 21)-வெள்ளிக்கிழமை -வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 8 (ஆவணி 23)- ஞாயிற்றுக்கிழமை -வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 15 (ஆவணி 30)- ஞாயிற்றுக்கிழமை -வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 16(ஆவணி 31)-திங்கட்கிழமை -வளர்பிறை முகூர்த்தம்
செப்டம்பர் 2024 அஷ்டமி நவமி கரி நாட்கள்
அஷ்டமி-செப்டம்பர் 11 (ஆவணி 26 )-புதன்கிழமை மற்றும் செப்டம்பர் 25 (புரட்டாசி 9)- புதன்கிழமை
நவமி-செப்டம்பர் 12 (ஆவணி 27)- வியாழக்கிழமை மற்றும் செப்டம்பர் 26(புரட்டாசி 10)- வியாழக்கிழமை
கரிநாள்-செப்டம்பர் 13 (ஆவணி 28)- வெள்ளிக்கிழமை
செப்டம்பர் 2024 ல் வாஸ்து நாள் கிடையாது.