செவ்வாய் பெயர்ச்சியால் சில ராசிகள் நல்ல யோகத்தை பெற போகிறார்கள். மிகவும் சக்தி வாய்ந்த கிரகமான இந்த செவ்வாய் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் உண்டாகக்கூடிய பலன்களை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி பலவித நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் மேலும் இதனுடைய தாக்கத்தால் பொருளாதார நிலை மேம்பட்டு சொந்தமாக வீடு வாகனங்கள் நிலம் போன்றவற்றை வாங்கலாம். வெளி பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் உடன்பிறந்தவர்களிடமிருந்து ஏதாவது உதவி கிடைக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். மேலும் உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்வதில் சில சிக்கல்கள் ஏற்படலாம் எனவே மற்றவர்களிடம் எதுவும் கூறாமல் இருப்பது நல்லது.
மிதுன ராசி
செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் லாபம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளும் அதிகரித்த வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து உறவினர்களுக்கும் இடையே ஒரு நல்ல ஒற்றுமை இருக்கும்.
கடக ராசி
கடக ராசி காரர்களுக்கு செவ்வாய் பயிற்சி சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிம்மதி அனைத்துமே இருக்கும் கணவன் மனைவி இடையே நல்ல ஒற்றுமை இருக்கும். வீட்டில் உள்ள குழந்தைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் லாபமானதாக அமையும். பொருளாதார நிலை மேம்படும். வீட்டில் உள்ள உறவினர்களாலும் உங்களுடைய உற்ற நண்பர்களாலும் பெரிய ஆதரவு கிடைக்கும். வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து சுபகாரிய தடைகளும் நீங்கி நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். சில பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்பதற்கான தைரியம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி அமைதி அனைத்துமே நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் அதில் லாபம் பெறலாம் வியாபாரத்திலும் லாபம் பெறலாம்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக வீட்டில் செல்வம் அதிகரிக்கும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மேலும் உங்களுடைய வியாபாரத்திலும் வேலை பார்க்கும் இடத்திலும் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய தந்தையால் சில முன்னேற்றத்தை காண்பீர்கள்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு சில தடைகளை கொடுத்தாலும் சில நன்மைகளையும் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அதிகமாக தேவை. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சுற்று கடினமாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் காரணமாக உடல் நிலையில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பணம் சம்பாதிக்க சில முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கடின உழைப்பும் போட வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும் நிம்மதியும் அமைதியும் இருக்கும்.
மகர ராசி
மகர ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக வேலையில் முழு ஆதரவும் கிடைக்கும். எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த காலகட்டத்தில் நீங்கள் அதை செய்து காட்டுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் உங்களை சந்தோஷப்படுத்தும் மகிழ்ச்சியான சூழலும் உங்களுக்கு அமையும். ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்றால் அதனை இந்த காலகட்டத்தில் நீங்கள் முயற்சி செய்யலாம்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பயிற்சி சில சவால்களை கொடுக்கும் வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். சிரமங்களை சந்திக்க நேரிட்டாலும் அதிலிருந்து சற்று முன்னேற வாய்ப்பு உள்ளது குழந்தைகள் மூலம் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவே இந்த நேரத்தில் உங்களுடைய எதிரிகளிடமிருந்து விலகி இருப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.
மீன ராசி
மீன ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும் குழந்தைகளுடன் உங்களுடைய உறவு மேம்படும். மாணவர்கள் கடின உழைப்பின் காரணமாக கல்வியில் முன்னேறுவார்கள் ஆசிரியர்களுடைய முழு ஆதரவையும் பெற்று படிப்பது சிறந்த மாணவர்களாக செயல்படுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ஐப்பசி மாதத்தில் ஜாக்பாட் அடித்து பணம் கொட்ட போகும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இதில் உங்கள் ராசியும் உள்ளதா?