Advertisement
உடல்நலம்

செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Advertisement

நமக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பழங்கள் என முக்கனிகளை குறித்து நம் முன்னோர்கள் பாரம்பரியமாக சொல்லிக் கொடுத்து கொண்டே தான் வந்தனர் அதாவது மா, பலா, வாழை இதில் இன்று வாழைப்பழத்தின் மகத்துவத்தை பற்றி காண்போம். வாழைப்பழங்களில் பல வகைகள் உண்டு பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், வெள்ளை வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம், மோரீஸ் வாழைப்பழம் மற்றும் மட்டி வாழைப்பழம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இதையும் படியுங்கள் : சுக்கை காட்டிலும் பெரிய மருந்து இல்லை ! சுக்கின் மருத்துவ பயன்கள் !

Advertisement


அந்த அளவிற்கு பல வகையான வாழைப்பழங்கள் உள்ளது. இதில் பல நபர்கள் செவ்வாழையை சாப்பிடுங்கள் உடலுக்கு நல்லது, நன்மை பயக்கும் என்றெல்லாம் கூறுவார்கள். அவர்கள் கூறுவது உண்மைதான் செவ்வாழை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் அது என்னென்னவென்று தெரிந்து சாப்பிடுங்கள் தெரியாதவர்களும் இனி தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள். செவ்வாழைப்பழம் பற்றிய தகவலை இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் இன்று நாம் காண இருக்கிறோம்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

சிறுநீரக கல்

செவ்வாழைப்பழத்தை நாம் தினசரி ஒன்று சாப்பிட்டு வருவதால் சிறுநீரகத்தில் கற்கள் வராமல் பாதுகாக்கிறது. அதற்கு காரணம் செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம் என்ற பொருள் அதிகளவில் நிறைந்துள்ளது. மேலும் செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதனால் நம்ம உடம்பில் உள்ள எலும்புகளும் வலுபெறும்.

இரத்த அழுத்தம்

செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் நம் உடம்பில்

Advertisement
ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து செவ்வாழைப்பழம் நம்மளை பாதுகாக்கிறது. இரத்த அழுத்த பிரச்சனை நமக்கு வராமல் ஆரோக்கியமாக வைத்திருப்பதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் நம்மளை அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.

விட்டமின் பி6

நமது உடம்பில் ரத்தசோகை நோய் இருக்கும் பட்சத்தில் செவ்வாழையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

Advertisement
இரத்த சோகை நோயிலிருந்து நம்மளை விரைவில் குணப்படுத்தும். ஏனென்றால் செவ்வாழை பழத்தில் விட்டமின் பி6 என்ற சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் நமது உடம்பில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் அதிகரித்து ரத்தத்தின் அளவையும் அதிகரிக்கிறது.

புற்றுநோய்

செவ்வாழையில் உள்ள அதிகபட்ச நன்மை என்ன தெரியுமா மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டின் என்ற தனிமம் அதிகமாக உள்ளதால். நம் உடம்பில் இரத்தம் உறைதல் பிரச்சனை சரியாகி நம் உடம்பை புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சக்கரை நோய்

மேலும் செவ்வாழையில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருப்பதினால் சர்க்கரை நோயாளிகள் இதை உணவாக தினசரி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சக்கரை நோயின் தாக்கத்தை குறைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

1 மணி நேரம் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

11 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

13 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

14 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

17 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

17 மணி நேரங்கள் ago