Advertisement
ஸ்நாக்ஸ்

நாவில் எச்சி ஊறும் தேங்காய் பால் பனியாரம் செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக காலை உணவு ராஜா விருந்து என்று கூறுவார்கள். ஏன்னென்றால் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நம் உடலுக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை இருக்காது ஆகையால் காலையில் சாப்பாட்டை ராஜ உணவு என்பர். மதிய உணவை வயிறு பசிக்கு ஏற்றார் போல் சாப்பிட வேண்டும் என்பார்கள். இரவு உணவு மட்டும் அளவாக சாப்பிட வேண்டும் இல்லையென்றால் சாப்பாட்டை தவிர்த்து விட்டு வெறும் பழங்கள் சாப்பிட்டால் போதுமானது என்றும் சொல்வார்கள்.

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையுடன் ராகி அல்வா செய்வது எப்படி ?

Advertisement

இப்படி இப்பொழுது எதை சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிக்கொண்டு தான் வருகிறார்கள். ஆகையால் இன்று இரவு உணவுக்கு சாப்பிடுவதற்கு தேங்காய் பால் கொண்டு செய்த பணியாரத்தை பற்றி பார்க்கலாம். இதை இரவு தான் சாப்பிட வேண்டும் என்று கிடையாது மழை நேரங்களில் சூடாக சாப்பிட வேண்டும் என்று தோனும் போதும் இதை செய்து சாப்பிடலாம். இன்று தேங்காய் பால் பணியாரம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

தேங்காய் பால் பனியாரம் | Coconut Milk Paniyaram Recipe in Tamil

Advertisement
2000/svg" width="0" height="0" style="display:block;width:0px;height:0px">
Print Recipe
பொதுவாக காலை உணவு ராஜா விருந்து என்று கூறுவார்கள். ஏன்னென்றால் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நம் உடலுக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை இருக்காது ஆகையால் காலையில் சாப்பாட்டை ராஜ உணவு என்பர். மதிய உணவை வயிறு பசிக்கு ஏற்றார் போல் சாப்பிட வேண்டும் என்பார்கள். இரவு உணவு மட்டும் அளவாக சாப்பிட வேண்டும் இல்லையென்றால் சாப்பாட்டை தவிர்த்து விட்டு வெறும் பழங்கள் சாப்பிட்டால் போதுமானது என்றும் சொல்வார்கள். இப்படி இப்பொழுது எதை சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிக்கொண்டு தான் வருகிறார்கள். ஆகையால் இன்று இரவு உணவுக்கு சாப்பிடுவதற்கு தேங்காய் பால் கொண்டு செய்த பணியாரத்தை பற்றி பார்க்கலாம். இதை இரவு தான் சாப்பிட வேண்டும் என்று கிடையாது மழை நேரங்களில் சூடாக சாப்பிட வேண்டும் என்று தோனும் போதும் இதை செய்து சாப்பிடலாம். இன்று தேங்காய் பால் பணியாரம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword Coconut Milk Paniyaram, தேங்காய் பால் பனியாரம்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 18

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 பனியாரகல்
  • 1 சினுக்கோலி
  • 1 மிக்ஸி
  • 1 குழம்பு பாத்திரம்

Ingredients

மாவு அரைக்க

  • 1 கப் இட்லி அரிசி
  • 4 tbsp உளுந்தம் பருப்பு
  • 2 tbsp வெந்தயம்
  • 2 tbsp உப்பு
  • ¼ tbsp சமையல் சோடா

வதக்க தேவையான பொருட்கள்

  • 1 கப் தேங்காய் பால்
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2  பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 1 கேரட் பொடியாக நறுக்கியது
  • ¼ கப் கொத்த மல்லி பொடியா நறுக்கியது

Instructions

  • முதலில் மாவு தயார் செய்வதற்காக கொடுக்கப்பட்ட பொருட்களை அந்த அளவில் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து சிறிது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்
    Advertisement
    ஊற்றிக் கொள்ளுங்கள் பின் எண்ணெய் நன்கு சூடு ஏறியதும் அதில் கடுகை சேர்த்துக் கொள்ளவும் நன்றாக பொரிந்ததும் அதில் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் கீரிய பச்சை மிளகாய் வையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அதன் பின் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன். பின் பொடி பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக கிளறி விட்டு வதக்கவும். அதன் பின்பு கடைசியாக கேரட்டையும் பொடி பொடியாக நறுக்கி அதையும் கடாயில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • கேரட் மற்றும் போட்டுள்ள அனைத்து காய்கறிகளும் நன்றாக வதங்கியதும் கடாயை கீழே இறக்கி வைத்து விடுங்கள். பின்பு நாம் ஊறவைத்த பொருள்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனுடன் தேவையான அளவு உப்பு, சமையல் சோடா சேர்த்து நான்கு கலக்கி கொள்ளவும். அதன் பின்பு நாம் வைத்திருக்கும் தேங்காய் பாலையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  • அதன்பின் கடைசியாக நாம் வைத்துள்ள வதக்கிய காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து மற்றும் பொடி பொடியாக நறுக்கி கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் பனியார கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறி ஏதும் ஒவ்வொரு பனியார குழியிலும் சிறிது நெய் ஊற்றி குழி அளவுக்கு மாவை ஊற்றிக் கொள்ளுங்கள். பின் கீழ்ப்பகுதி வெந்து வந்ததும் சினுகோலியை வைத்து பணியாரத்தை திருப்பி போட்டுக் கொள்ளவும்.
  • இப்படியே இருபுறமும் பொன்னிறமாக வந்தவுடன் பணியாரத்தை எடுத்துக் கொள்ளவும் இப்படியாக மீதம் இருக்கும் மாவையும் ஊற்றி பணியாரமாக எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான ரூசியான தேங்காய் பால் பணியாரம் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Calories: 18kcal | Carbohydrates: 6g | Protein: 2g | Fat: 1.1g | Fiber: 0.3g

English Overview: paniyaram is one of the most important dishes in south india. paniyaram recipe or paniyaram seivathu eppadi or paniyaram recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

2 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

2 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

2 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

3 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

4 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

6 மணி நேரங்கள் ago