வீட்ல இருக்குறவங்களா இருந்தாலும் சரி, வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி வீட்ல எப்பவுமே மிளகாய் தூள், இட்லி பொடி, மல்லித்தூள், பூண்டு பொடி இது எல்லாமே அரைச்சு வச்சுப்போம். இது அரச்சி வச்சிக்கிறது மூலமா நமக்கு நேரம் கொஞ்சம் மீதமாகும். அந்த சமயத்துல நம்ம மற்ற வேலைகளை பார்க்கலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப டேஸ்டா சூப்பரா ஒரு பூண்டு பொடி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த பூண்டு பொடி ஒரு தடவை அரைச்சு வச்சிட்டீங்கன்னா அவ்வளவு வாசனையா இருக்கும் ஆறு மாசம் வரைக்கும் ஸ்டோர் பண்ணிக்கலாம்.
பிரிட்ஜுக்குள்ள வச்சுட்டா கெட்டே போகாது. ஒரு காற்று புகாத பாட்டில்ல போட்டு இந்த பூண்டு பொடி ஸ்டோர் பண்ணி வச்சுட்டா எப்ப எல்லாம் நமக்கு தேவையோ அப்ப எல்லாம் எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். சுட சுட சாதத்துல பூண்டு பொடி போட்டு அதுக்கு மேல நல்லெண்ணெய் இல்லன்னா நெய் ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். நம்ம இதுக்கு உளுந்தம் பருப்பு மட்டும்தான் சேர்க்கப் போறோம். பெருசா எந்த ஒரு பருப்பு வகைகளும் சேர்த்து செய்யப்போறது கிடையாது வெறும் உளுந்தம் பருப்பு மட்டும் சேர்த்தாலே அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.
எல்லா பொருட்களையும் நல்லா வறுத்து ஆறவைத்து அரைச்சு எடுத்து வைக்கிறதால பூச்சி வண்டு எதுவுமே வராது. சிவக்க வறுத்துக்கனும். வீட்ல பொடி தோசை யாராவது கேட்டாங்கன்னா இந்த பூண்டு பொடியை போட்டு சூப்பரா ஒரு தோசை செஞ்சு கொடுக்கலாம். மேலும் இந்த பூண்டு பொடியில் நல்லெண்ணெய் ஊத்தி இட்லி தோசைக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சட்னி சாம்பார் போன்ற சைடு டிஷ் வைக்கிறதுக்கு நேரமில்லை அப்படின்னா இந்த சுவையான பூண்டு பொடியை செஞ்சு வச்சுகிட்டோம் அப்படின்னா அவசரத்துக்கு நமக்கு பயன்படும்.
சூப்பரான இந்த ரெசிபியை கண்டிப்பாக எல்லாருமே ட்ரை பண்ணி பாக்கணும் இட்லி பொடி அரைச்சு வச்சிருக்கீங்க அதே மாதிரி எல்லார் வீட்லயும் இந்த பூண்டு பொடியும் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரே மாதிரியா பொடி சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா மாத்தி மாத்தி சாப்பிடுக்கலாம். இந்த சுவையான பூண்டு பொடி ரெசிபி ஒரு சிலருக்கு எப்படி செய்யறதுன்னு தெரியாது ஆனா செய்ய தெரிஞ்சவங்களும் கூட இந்த செய்முறையில் ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா கண்டிப்பா அடிக்கடி இந்த பொடியை வீட்டில் செஞ்சு வச்சுப்பீங்க. இப்ப வாங்க இந்த சுவையான பூண்டு பொடி ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பூண்டு பொடி | Garlic Podi Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 100 கி பூண்டு
- 15 வர மிளகாய்
- 50 கி உளுத்தம் பருப்பு
- 1 துண்டு பெருங்காயம்
- 3 கொத்து கறிவேப்பிலை
- 1/2 கப் தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- பூண்டை தோலோடு இடித்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- மறுபடியும் அந்த கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் பெருங்காயம் கருவேப்பிலை கல்லுப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து அதனையும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- அனைத்தையும் ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான பூண்டு பொடி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வேர்க்கடலை பொடி செஞ்சு பாருங்க ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடலாம்!!